சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - நிபந்தனையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நோக்கமொன்றுக்காக வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) “வங்கியல்லா நிதியியல் துறையின் ஒருங்கிணைப்பிற்கான பிரதான திட்டத்தினுள்” ஒன்றினுள் கம்பனியினை இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாட்டினைக் கண்டறியும் நோக்கத்திற்காக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2021.10.13 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் வரையறுக்கப்பட்ட ஆறு (06) மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு தொழிலை மீளத் தொடங்குவதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் விவகாரங்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்கும் மேற்குறித்த செயன்முறையினை தொடங்கி வசதிப்படுத்துவதற்கும் நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்திற்கு (குழாம்) அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதேவேளை சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பணிப்பாளர்கள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளரினால் அத்துடன்/அல்லது குழாத்தினால் அதிகாரமளிக்கப்படவுள்ள தொழிற்பாடுகளை மாத்திரம் கொண்டுநடாத்துதல் வேண்டும்.

மேலும், மேலே குறிப்பிட்ட செயன்முறையை நிறைவேற்றுதல் தவிர்ந்த ஏதேனும் நிதித்தொழிலினைஅல்லது வேறு எதுவாயினும்  தொழிலை கொண்டுநடாத்துவதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அனுமதிக்கப்படவில்லை என்பதை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்குத் தெரிவிக்கின்றது. எனவே, சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கான ஒப்பந்தக் கடப்பாடுகளைத் தீர்ப்பனவு செய்தல் தவிர ஏதேனும் விதத்தில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியுடன் வைப்புக்களை வைப்பதிலிருந்தும் அல்லது ஏதேனும் வேறு தொழிலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்படுகின்றனர். சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கான அனைத்து கடன்படுநர்களுக்கும் கொடுப்பனவு செய்யத்தக்கவர்களான ஏதேனும் வேறு தரப்பினர்களுக்கும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சின் கீழே தரப்பட்ட வங்கிக் கணக்குகள் ஊடாக மாத்திரம் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சிற்கான தமது ஒப்பந்தக் கடப்பாடுகளை உரிய நேரத்தில் தீர்ப்பனவு செய்யுமாறும் நிலுவைகளைக் கொடுப்பனவு செய்யாமைக்காக அவர்களுக்கெதிரான சாத்தியமான வழக்காடல்களைத் தவிர்ப்பதற்கு அனைத்து கொடுப்பனவுகளுக்குமான சான்றாக பதிவுகளைப் பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

வங்கி
கிளை
கணக்கு இலக்கம்
சம்பத் பாங்க் பிஎல்சி தலைமை அலுவலகம் 2930013377
கொமர்ஷ ல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி கொள்ளுபிட்டி 1107428801

 

மேலதிக விபரங்களுக்கு:

நிறுவனம்/திணைக்களம் நோக்கம் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் முகவரி
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசாரணைகள் 011 2477504 snbfi_query@cbsl.lk
அழைப்பு நிலையம்,  நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் பொதுவான விசாரணைகளுக்கு 011 2477966
1935
fcrd@cbsl.lk
சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி/நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாம் வைப்புக்கள்,  முற்பணங்களைத் தீர்ப்பனவு செய்தல் மற்றும் வேறு தெளிவுபடுத்தல் தொடர்பான விசாரணைகள் 011 7534800 info@sfs.lk

Published Date: 

Wednesday, October 13, 2021