சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களின் பெயர் நாணயச் சபைக்கு பெயர்குறிக்கப்பட்டதை பாராளுமன்றப் பேரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களினால் 2027 யூன் வரை ஆறு ஆண்டுகளைக் கொண்ட புதிய பதவிக்காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அவர் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்;கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பணியாற்றும் முதலாவது சனாதிபதி சட்டத்தரணியாக விளங்குகின்றார்.
தற்பொழுது இவர் வெளிநாட்டுப் படுகடன் கண்காணிப்புக் குழுவின் நாணயச் சபை மட்டத் தலைவராகவும் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவிற்கும் இவர் தலைமைதாங்குகின்றார்.








