இலங்கை மத்திய வங்கி அதன் பிந்திய சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2026 சனவரி 30 அன்று வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத வீழ்ச்சியினால் ஆதரவளிக்கப்படும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினை அனுசரித்து மத்திய வங்கியினால் மேற்கொண்ட நாணய மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள் பற்றிய ஆர்வலர் புரிந்துகொள்ளலை மேம்படுத்துவதனை சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கை நோக்காகக் கொள்கின்றது.
-
The Central Bank of Sri Lanka Publishes the Market Operations Report - December 2025
-
CCPI based headline inflation accelerated in January 2026
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக அதே மட்டத்தில் காணப்பட்டதன் பின்னர், 2026 சனவரியில் அதிகரித்தது. இதற்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுடன் பரந்தளவில் இசைந்துசெல்லும் வகையில், 2025 திசெம்பரின் 2.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 சனவரியில் 2.3 சதவீதத்திற்கு பதிவாகியிருந்தது.
-
External Sector Performance – December 2025
நடைமுறைக் கணக்கானது 2025 திசெம்பரில் சிறியளவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. 2025இல் அநேகமான மாதங்களில் மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் விளைவொன்றாக, நடைமுறைக் கணக்கானது 2025இல் ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் தொகையிலான (தற்காலிகமானது) மிகையொன்றினைப் பதிவுசெய்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் விரிவடைந்தது. மேலும், ஏற்றுமதி வருவாய்கள் 2025இல் வரலாற்று ரீதியில் உயர்ந்தளவிலான மட்டமொன்றினைப் பதிவுசெய்ததற்கு மத்தியில், ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 உடன் ஒப்பிடுகையில் 2025இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.9 பில்லியனிற்கு விரிவடைந்து காணப்பட்டது.
-
Sri Lanka PMI - Construction increased in December 2025
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 திசெம்பரில் 67.1 ஆக அதிகரித்தது. பாதகமான காலநிலை நிலைமைகளினால் ஏற்பட்ட ஆரம்ப தொழிற்பாடு சார்ந்த இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்புடைய காலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விரிவடைதலை பெரும்பாண்மையான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
தித்வா புயலின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவின் இலங்கைக்கான அண்மைய விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 சனவரி 28 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
-
The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டுத்துறை மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் ஆகியவற்றில் பரிணமிக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாட்டை பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடானாது பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதற்குத் துணையளிக்குமென சபை கருதுகின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – December 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 திசெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 திசெம்பரில் 60.9 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டியது. மாதத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட மோசமான வானிலையுடன் தொடர்புடைய இடையூறுகளுக்கு மத்தியில், பிரதானமாக பருவகால கேள்வியினால் துணையளிக்கப்பட்டு, இவ் அதிகரிப்பு அனைத்து துணைச் சுட்டெண்களுக்கும் சாதகமாக பங்களித்திருந்தது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2026 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
Extension of the Term of the Administrator Appointed to Nation Lanka Finance PLC under the Banking (Special Provisions) Act, No. 17 of 2023
2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியிற்கு நியமிக்கப்பட்ட நிருவாகத்தத்துவக்காரரான திரு. பி டபிள்யு டி என் ஆர் ரொட்ரிகோ என்பவரின் பதவிக்காலத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது.
2025.07.04ஆம் திகதியிட்ட 2443/57ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் விடுக்கப்பட்ட கட்டளையின் ஊடாக முதலில் நியமிக்கப்பட்ட திரு. ரொட்ரிகோ 2026.01.04ஆம் திகதியிலிருந்து 2026.07.03ஆம் திகதி வரையான மேலும் ஆறு (06) மாத காலப்பகுதியொன்றிற்கு இப்பொறுப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்.
-
CCPI based headline inflation remained unchanged in December 2025
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 திசெம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது. டித்வா புயலின் காரணமாக 2025 திசெம்பரில் கணிசமாக மாதத்திற்கு மாத விலைகளில் அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்கு பிரதானமாக துணையளித்திருந்தது.
உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 திசெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்ட அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) நவெம்பரில் பதிவாகிய 1.7 சதவீதத்திலிருந்து 2025 திசெம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது.








