• Bimputh Finance PLC-Cancellation of Licence issued under the Finance Business Act, No. 42 of 2011

    2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் ஒட்டுமொத்த குறிக்கோளையும் அடையும் நோக்குடன் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் அத்துடன் கம்பனியின் நெருக்கடியான  நிதியியல் நிலைமையைத் தீர்க்கும் பொருட்டு பிம்புத் பினான்ஸ் பிஎல்சிக்கு விடுக்கப்பட்ட குறிப்பான பணிப்புரைகளையும் தொடர்ச்சியாக மீறி வருகின்றதுஃ முரணாக இயங்கியுள்ளது. இதன்விளைவாக, பற்றாக்குறையான மூலதன மட்டம், மோசமான சொத்துத் தரம், மற்றும் தொடர்ச்சியான இழப்புக்கள் என்பவற்றின் காரணமாக பிம்புத் பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் சீர்குலைந்துள்ளன.

  • CCPI based headline inflation experienced a further slowdown in August 2023

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

    உணவு வகையானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூலையின் 1.4 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்கும் 4.8 சதவீதத்தைப்  பதிவுசெய்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூலையின் 10.5 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 8.7 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 ஓகத்தில் -0.02 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு, உணவு வகைகளில் அவதானிக்கப்பட்ட  -0.41 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளின் ஒன்றிணைந்த விளைவும் உணவல்லா வகையில் பதிவுசெய்யப்பட்ட 0.39 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களும் காரணமாக அமைந்தன. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 யூலையின் 5.9* சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

    இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளினதும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகளினதும் விளைவொன்றாக, பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

  • External Sector Performance - July 2023

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் 2023 யூலையில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. இருப்பினும், 2023 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2022இன் தொடர்புடைய காலப்பகுதியிலும் பார்க்க மிகவும் தாழ்ந்தளவில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

    தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2023 யூலையில் முன்னைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் மேம்பட்டுக் காணப்பட்டன.

    2023 யூலை மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தபோதிலும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.

    மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டமானது 2023 யூலை இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.8 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டது.

    2023 யூலையில் இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலரிற்கெதிராக ஓரளவு தளம்பல்தன்மையினைக் கொண்டிருந்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – July 2023

    கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 யூலையில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றி 43.2 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய,  சவால்மிக்க தொழிற்துறை சூழலுக்கு மத்தியில் அநேகமான நிறுவனங்கள் உறங்குநிலையிலேயே காணப்பட்டன.  எனினும், பொருட்கள் செலவில் படிப்படியான வீழ்ச்சியானது மட்டுப்படுத்தப்பட்ட முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்களுக்கான ஆக்கபூர்வமான சூழலொன்றினை வழங்கியது. மேலும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மாதகாலப்பகுதியில் ஓரளவு மீளத்தொடங்கப்பட்டன.

    யூலையில் குறைவான வேகமாயினும் புதிய கட்டளைகள் சுருக்கமடைந்தன. வெளிநாட்டு நிதியிடப்பட்ட கருத்திட்டங்களுக்கான விலைக்கோரல் சமர்ப்பிக்கின்ற வாய்ப்புக்கள் அநேகமாக மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற அதேவேளை, தனியார் சேவைநாடிகள் மேலும் செலவு குறைப்புகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர் என பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். மேலும், கருத்திட்டங்களை கொண்டிருக்கின்ற நிறுவனங்கள் மேலதிக இயலளவுகளை கொண்டிருப்பதனால் துணை ஒப்பந்த வாய்ப்புகளும் பற்றாக்குறையாக உள்ளன. அதேவேளை, முக்கிய அலுவலர்களை மாத்திரம் தக்கவைப்பதற்காக நிறுவனங்கள் முனைந்தமையினால் மாதகாலப்பகுதியில் தொழில் நிலையானது மேலும் வீழ்ச்சியடைந்தது. மேலும், அநேகமான நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் காணப்படுகின்றமையினாலும் குறுகிய காலத் தேவைப்பாடுகளை மாத்திரம் பூர்த்திசெய்வதனாலும் கொள்வனவுகளின் அளவு மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரமானது மாதகாலப்பகுதியில் உறுதியாகக் காணப்பட்டதுடன் வழங்குநர் கொடுகடன் வசதிகளும் கிடைக்கப்பெறத்தக்கனவாகவுள்ளன என சில பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

    பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சி, வட்டி வீதங்கள் மற்றும் பொருட்கள் செலவுகளில் குறைவு அத்துடன் இடைநிறுத்தப்பட்ட அரசாங்க நிதியளித்தல் கருத்திட்டங்களை மீளத்தொடங்குவது பற்றிய தற்போதைய பேச்சுவார்த்தைகள் என்பனவற்றின் பிரதான காரணமாக அடுத்துவரும் மூன்று மாதங்களை நோக்கி நிறுவனங்கள் மத்தியிலான எண்ணப்பாங்கு பரந்தளவில் சாதகமாக காணப்பட்டது.

  • Raising Awareness on Domestic Debt Optimisation Programme

    உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக இன்று, அதாவது 2023 ஓகத்து 28 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என தாங்களாக கோருகின்ற ஆட்கள் குழுவொன்றினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது,  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புபட்ட விடயங்கள் பற்றிக்  கலந்துரையாடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களுடனான சந்திப்பொன்றுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக கோரிக்கைவிடுத்தனர். சொல்லப்பட்ட கோரிக்கையினை பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சொல்லப்பட்ட எதிர்ப்பில் ஈடுபட்டவர்களைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து பேருடன் இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் பி.ப.

  • Public Complaints on Unlawful Pyramid Schemes

    இணையவழித் தளங்க;டாகத் தொழிற்படுகின்ற சில திட்டங்கள் அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதனை நியாயப்படுத்தும் முயற்சியொன்றாக கீழே குறிப்பிடப்பட்டவை போன்ற சில விடயங்களைக் குறிப்பிட்டு இத்திட்டங்களில் பணத்தை வைப்புச் செய்யுமாறுஃமுதலிடுமாறு முதலீட்டாளர்களை தவறாக வழிநடாத்துகின்றன என்பதனைக் குறித்துக்காட்டுகின்ற பல முறைப்பாடுகள் அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

  • The Central Bank of Sri Lanka maintains policy interest rates at their current levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஓகத்து 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் கவனமான பகுப்பாய்வு மற்றும் 2023 யூனிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட நாணய நிலைமைகளின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலினையும் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இதுவரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாணயக்கொள்கை தளர்வடைதல் வழிமுறைகளிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய சீராக்கத்தினையும் சந்தை வட்டி வீதங்களை மேலும் சீராக்குவதற்கு விரைவாக இடமளிப்பதற்கான தேவைப்பாட்டினையும் நாணயச்சபை கருத்தில் கொண்டது.

  • Release of ‘Economic and Social Statistics of Sri Lanka – 2023’ Publication

    ‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

  • Land Valuation Indicator – First Half of 2023

    கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 15.2 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 215.3 ஆகப் பதிவாகியது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் முறையே 17.2 சதவீதம், 15.1 சதவீதம் மற்றும் 13.5 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்புகளுடன் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 4.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கான அதிகூடிய பங்களிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலிருந்து இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகள் காணப்பட்டன. எனினும், 2023இன் முதலரை காலப்பகுதியில் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அரையாண்டு வளர்ச்சியில் வேகத்தளர்ச்சி அவதானிக்கப்பட்டது.

  • Regulations on Financial Consumer Protection

    இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 10(இ) பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2023ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை வழங்கி, அதனை 2023.08.09 அன்று 2344/17ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் பணி வழங்குநர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஒரேசீர்மையான அடிப்படையில் ஏற்புடையதாவிருக்கும் என்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பாக, வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்குவிடுதல் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு பணிப்புரைகளின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Pages