கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூனின் 5.2 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவல்லா வகைகளின் பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதன் பின்னர், உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 11.3 சதவீதத்திலிருந்து 2021 யூலை 11.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூலை 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.









சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களின் பெயர் நாணயச் சபைக்கு பெயர்குறிக்கப்பட்டதை பாராளுமன்றப் பேரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களினால் 2027 யூன் வரை ஆறு ஆண்டுகளைக் கொண்ட புதிய பதவிக்காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அவர் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.