பன்னாட்டு நாணய நிதிய பணிக்குழுவொன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நான்கு ஆண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின்; இரண்டாம் மீளாய்வினையும் 2024 உறுப்புரை IV ஆலோசனையையும் நிறைவுசெய்வதற்காக 2024 மார்ச் 07-21 காலப்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. பணிக்குழுவின் பின்னர் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும்; விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாம் மீளாய்வினை நிறைவுசெய்வதற்கு பொருளாதாரக் கொள்கைகள் மீதான அலுவலர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டியுள்ளனர். பணிக்குழுவானது பின்வரும் அறிக்கையினை வெளியிட்டதுடன் அதனைக் கீழுள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
-   
          IMF Reaches Staff-Level Agreement on the Second Review of Sri Lanka’s Extended Fund Facility and Concludes the 2024 Article IV Consultation    
  
-   
          Purchasing Managers’ Indices indicate improvements in Manufacturing and Services  activities in February 2024    
  தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 பெப்புருவரியில் 56.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. தொழில் நடவடிக்கைகளின் தொடர்ச்சியான விரிவடைதலானது ஏனைய பல துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, நிலவுகின்ற குறைவான சந்தை வட்டி வீதங்களுக்கிசைவாக நிதியியல் பணிகளின் தொழில் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தன. மேலும், மாதகாலப்பகுதியில், போக்குவரத்து மற்றும் கல்வி துணைத் துறைகளில் சாதகமான அபிவிருத்திகளும் பதிவுசெய்யப்பட்டன. அதேவேளை, சுற்றுலாப்பயணி வருகைகள் 2020 சனவரியிலிருந்து அதிகூடிய மட்டத்தைப் பதிவுசெய்தமைக்கு மத்தியில்; தங்குமிடம், உணவு மற்றும் குடிபானங்கள் துணைத் துறை தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தது. 
-   
          Publication of the Macroprudential Policy Framework    
  இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 63(2)ஆம் பிரிவின் பிரகாரம் பேரண்டமுன்மதியுடைய கொள்கைக் கட்டமைப்பினை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பேரண்டமுன்மதியுடைய கொள்கை வகுத்தல் செயன்முறை அதேபோன்று நிதியியல் முறைமையில் பேரண்டமுன்மதியுடைய கொள்கையின் வகிபாகம் என்பன பற்றி தொடர்புடைய ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இவ்வெளியீடு நோக்காகக் கொண்டுள்ளது. 
-   
          External Sector Performance - January 2024    
  வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினத்தின் முக்கிய காரணமாக 2024 சனவரியில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. பணிகள் வர்த்தகத்தினைப் பொறுத்தவரையில், கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்/ வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளலுடன் தொடர்புடைய பணிகள் என்பன 2023 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2024 சனவரியில் குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, விமானப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை வழங்குகின்ற பணிகள் என்பவற்றில் வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்கள் முன்னைய ஆண்டின் சனவரி மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024இன் தொடர்புடைய காலப்பகுதியில் மேம்பாடொன்றினைப் பதிவுசெய்தன. 
-   
          CCPI based headline inflation decelerated in February 2024    
  கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 சனவரியின் 6.4 சதவீதத்திலிருந்து 2024 பெப்புருவரியில் 5.9 சதவீதத்திற்கு சரிவடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இச்சரிவானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது. 
-   
          SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – January 2024    
  கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 52.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. 2022 சனவரி தொடக்கம் முதற்தடவையாக நடுநிலையான அடிப்படை அளவினை இச்சுட்டெண் விஞ்சிச்சென்றமையை இது அடையாளப்படுத்துகின்றது. மாதகாலப்பகுதியில் புதிய கட்டடவாக்கப் பணி படிப்படியாகக் கிடைக்கப்பெறுகின்றமையாக இருக்கின்ற அதேவேளை, இடைநிறுத்தப்பட்ட சில கருத்திட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் மீளத்தொடங்கப்பட்டன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். 
-   
          Clarification by CBSL on Salary Hike    
  2024 – 2026 ஆண்டுகாலப்பகுதியினை உள்ளடக்கி தொழிற்சங்கங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஆளுகைச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்களுக்கான சமீபத்திய ஊதிய திருத்தம் தொடர்பில் அண்மைய பாராளுமன்ற அமர்வுகளில் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கள் மற்றும் குறிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த அண்மைக்கால செய்திக் குறிப்புக்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானத்தைக் கொண்டுள்ளது. 
-   
          Land Valuation Indicator  – Second Half of 2023    
  கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் மெதுவடைவொன்றை எடுத்துக்காட்டி, 7.1 சதவீதம் கொண்ட வளர்ச்சி வீதமொன்றைப் பதிவுசெய்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளிலும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளிலும் இத்தகைய மெதுவடைவை அவதானிக்கலாம். இவை, முறையே 8.8 சதவீதம், 6.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது அரையாண்டு அடிப்படையில் வீழ்ச்சியொன்றை எடுத்துக்காட்டியதுடன் 2023இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் 2.1 சதவீதம் கொண்ட மிதமடைந்த வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. இவ்வீழ்ச்சிக்கு 2023இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலும் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகளிலும் ஏற்பட்ட மெதுவான அதிகரிப்பு பெருமளவில் காரணமாக அமைந்தது. 
-   
          Administrative Penalties imposed by the Financial Intelligence Unit (FIU) on Financial Institutions from 27 September to 31 December 2023    
  2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம். அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2023 செத்தெம்பர் 27 தொடக்கம் திசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் கீழே காட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.14 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட தொகைத் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன. 
-   
          Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Excise Department of Sri Lanka    
  2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் வேறு தொடர்புபட்ட குற்றங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் தொடர்புடைய தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் 2024 சனவரி 09 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் பிரசன்னத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகம் திரு. ஜே. எம். எஸ். என். ஜயசிங்க, நிதியியல் உளவறிதல் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் திருமதி. ஈ. எச். மொஹொட்டி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டனர். 
 
            









