கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 பெப்புருவரியின் 3.3 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2020 மாச்சில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாகும். அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 7.9 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 9.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 1.3 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 1.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 பெப்புருவரியின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.








