The Monetary Policy Board, at its meeting held yesterday, decided to maintain the Overnight Policy Rate (OPR) at the current level of 7.75%. The Board arrived at this decision after carefully considering evolving developments and the outlook on both domestic and global fronts. The Board is of the view that the current monetary policy stance will support steering inflation towards the target of 5%.
-
The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged
-
Notice to General Public on Prohibited Pyramid Schemes
திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “SGO/sgomine.com” என்பது தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – October 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒத்தோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 ஒத்தோபரில் 61.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் அதிகரிப்பொன்றை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்து துணைச் சுட்டெண்களும் வளர்ச்சிக்காக சாதகமாக பங்களித்து, இவ்வதிகரிப்பானது பரந்த அடிப்படையினைக் கொண்டு காணப்படுகின்றது.
-
Public Consultation on Amendments to the Finance Business Act, No.42 of 2011 (FBA)
நிதிக் கம்பனிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையினை வலுப்படுத்தல், அதிகாரமளிக்கப்படாத நிதித்தொழில்களை விசாரித்தல் மற்றும் வழக்குத்தொடுத்தல், ஒப்பேறாத நிதிக் கம்பனிகளை தீர்த்துவைத்தல் மற்றும் ஒடுக்குதல் என்பவற்றுக்கான தேவைகளை அங்கீகரித்து இலங்கை மத்திய வங்கி நிதித்தொழில் சட்டத்திற்குத் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
-
CCPI based headline inflation further accelerated as expected towards the target in October 2025
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் மேலும் அதிகரித்து, பணவீக்க இலக்கினை நோக்கி தொடர்ந்தும் முன்னேற்றமடைவதைக் காண்பிக்கின்றது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, (ஆண்டிற்கு ஆண்டு) 2025 செத்தெம்பரின் 1.5 சதவீதத்திலிருந்து 2025 ஒத்தோபரில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Sri Lanka PMI - Construction increased in September 2025
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 செத்தெம்பரில் 67.6 இனை அடைந்து 2021இ;ன் பிந்திய பகுதி தொடக்கம் அவதானிக்கப்பட்ட நடடிவக்கையில் வலுவான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. தொடர்ச்சியாக கருத்திட்ட வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றமை கட்டடவாக்கத்துறையில் வளர்ச்சிக்கு உறுதியாக துணையளித்துள்ளது என பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
-
External Sector Performance – September 2025
இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகளைத் தொடர்ந்து, 2025 செத்தெம்பரில் மாதாந்த நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தது. எனினும், முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒன்றுசேர்ந்த நடைமுறைக்கு கணக்கு மிகை ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு இறக்குமதிச் செலவினம் ஐ.அ.டொலர் 2 பில்லியனை விஞ்சியமையினால், வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்தது.
-
Appointment of New Deputy Governors of the Central Bank of Sri Lanka
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, உதவி ஆளுநரான முனைவர் சி. அமரசேகர மற்றும் உதவி ஆளுநரான திரு. கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோரை முறையே 2025.10.24 மற்றும் 2025.11.03 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கௌரவ நிதி அமைச்சர் நியமித்துள்ளார்.
-
Sri Lankan Delegation Engaged in High-Level Meetings at the 2025 World Bank Group/ International Monetary Fund Annual Meetings, and Governor was Honoured with “A Grade” Award by Global Finance Magazine
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கையின் பேராளர்குழு 2025 ஒத்தோபர் 13 – 18 காலப்பகுதியின் போது வோசிங்டன் டி.சி இல் 2025 உலக வங்கிக் குழுமம்/ பன்னாட்டு நாணய நிதிய வருடாந்த கூட்டத்தின் போது தொடரான உயர்மட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சந்திப்புக்களில் முனைப்புடன் பங்கேற்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – September 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 செத்தெம்பரில் 55.4 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலைக்கானவைத் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் நடுநிலையான அடிப்படையான அளவிற்கு மேல் காணப்பட்டன.








