
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 திசெம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் அவரது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்அவர்களினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்படுவார்.








