இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில் அவர்களின் நேரத்தையும் செலவையும் மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும் தனியொரு மூலமாக இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.
-
Release of ‘A Step by Step Guide to Doing Business in Sri Lanka’
-
Release of “Sri Lanka Socio Economic Data – 2021” Publication
இலங்கை மத்திய வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படும் தரவுக்கையேடாகிய “ இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு – 2021” தற்போது பொதுமக்களின் தகவலுக்காக கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவுக்கையேடு தொடரின் 44வது தொகுதியாகும்.
-
CCPI based Inflation decreased to 5.7 per cent in September 2021
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஓகத்தின் 6.0 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 11.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 3.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஓகத்தின் 4.3 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Announcement of The Six-Month Road Map for Ensuring Macroeconomic and Financial System Stability
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் ‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலினை’ 2021 ஒத்தோபர் 01ஆம் திகதி அறிவிக்கவுள்ளார். இந்நிகழ்வானது இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுவதுடன் மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுச் சூழல் மற்றும் தேவையான சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் என்பவற்றின் காரணமாக பங்குபற்றுதலானது அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆளுநரினால் மேற்கொள்ளப்படும் விளக்கவுரையானது யூடியூப் (YouTube)மற்றும் முகநூல் (Facebook) என்பவற்றின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.
-
The Significance of Repatriation and Conversion of Export Proceeds for External Sector Stability and Overall Financial System Stability
இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இல் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினைக் காண்பித்துள்ளது. அண்மைய சுங்கத் தரவுகளுக்கமைய, 2020இல் பதிவுசெய்யப்பட்ட மாதாந்த சராசரியான ஐ.அ.டொலர் 837 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி வருவாய்கள் 2021 ஓகத்து இறுதியிலுள்ளவாறாக எட்டு மாத காலப்பகுதியின் சராசரியாக ஐ.அ.டொலர் 985 மில்லியனைக் கொண்டுள்ள வேளையில், சராசரி வருவாய்கள் 2021 யூன் - ஓகத்து காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,064 மில்லியன் பெறுமதியாக பதிவுசெய்யப்பட்டது. இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பாரிய வெளிநாட்டுச் செலாவணி ஈட்டுநராக வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை (வெவ்வேறான உற்பத்திகள் உள்ளடங்கலாக) காணப்படுவதால் இவ் அபிவிருத்தி பாராட்டத்தக்கதொன்றாகும்.
-
Meeting between the Governor of the Central Bank of Sri Lanka (CBSL) and Bangladesh High Commissioner to Sri Lanka
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
-
Government of Sri Lanka has extended the deadline for Request for Proposals (RFPs) for the Foreign Currency Term Financing Facility
Ministry of Finance (MoF) has extended the closing date for the submission of Request for Proposals (RFP) for the Foreign Currency Term Financing Facility for the Government of Sri Lanka 2021. The links in the MoF website and the External Resources Department (ERD) website are as follows:
-
NCPI based Inflation decreased in August 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூலையில் 6.8 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சி முற்றிலும் 2020 ஓகத்தில் நிலவிய உயர் தளத்தின் புள்ளிவிபர விளைவு காரணமாகவே வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், 2021 யூலையில் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.1 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம், 2021 யூலையில் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 யூலையில் 5.4 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 5.5 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்தது.
-
Appointment of new Secretary to the Monetary Board of the Central Bank of Sri Lanka
2021 செத்தெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது.
உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - August 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 ஓகத்தில் சுருக்கமடைந்தன.
2021 ஓகத்தில் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மீளெழுச்சி பெற்றமை நாட்டின் தயாரிப்பு நடவடிக்கைகளை மெதுவடையச் செய்துள்ளது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது முன்னைய மாதத்திலிருந்து 12.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2021 ஓகத்தில் 45.1 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்து இது, புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் காணப்பட்ட வீழ்ச்சியின் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்து.
கொவிட்-19 மேலும் பரவுவதனைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூலம் பணிகள் கொ.மு.சுட்டெண் 2021 ஓகத்தில் 46.2 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்து. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கை, தொழில் நிலை, நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்கள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன.