கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில், மேல் மாகாணம் பொருளாதாரத்தின் உயிரோட்டத்தின் மையமாக தொடர்ந்தும் விளங்கிய அதேவேளை அதன் பங்கு வீழ்ச்சியடைந்து ஒட்டுமொத்த சுருக்கமடைதலுக்கும் பங்களிப்புச்செய்தது.
நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (38.0 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், நோய்த்தொற்று நிலைமையின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் மெதுவடைந்ததன் விளைவாக அதன் பங்கு 2019 இலிருந்து 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.3 சதவீதம்) மற்றும் வடமேல் (11.0 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் காணப்பட்டன.