• Imposition of Administrative Penalties by the Financial Intelligence Unit (FIU) to Enforce Compliance on Financial Institutions during the Third Quarter of 2021

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமையை கருத்திற்கொண்டு தண்டப்பணம் விதித்துரைக்கப்படலாம்.

     அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனராக, நிதியியல் உளவறிதல் பிரிவு நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவற்கு, கீழே குறிக்கப்பட்டவாறு 2021 யூலை 01 தொடக்கம் 2021 செத்தெம்பர் 30 வரையான காலப்பகுதிக்கு மொத்தமாக ரூ. 2.0 மில்லியன் தொகையினை தண்டப்பணமாக சேகரித்தது. சேகரிக்கப்பட்ட தண்டப்பணம் திரட்டுநிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டது.

  • CCPI based Inflation increased to 7.6 per cent in October 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 12.8 அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Central Bank Issues New Rules on Conversion of Export Proceeds

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏற்கனவே காணப்படுகின்ற விதிகளை நீக்கி ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு அனுப்புதல் அத்துடன் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் 2021 ஒத்தோபர் 28ஆம் திகதியிடப்பட்ட 2251/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டவாறு புதிய விதிகளை வழங்கியுள்ளது. புதிய விதிகள் இலங்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதி செய்கின்ற இருசாராருக்கும் ஏற்புடையதாகும். 

  • Establishing an Advisory Committee for Revival of Failed Licensed Finance Companies

    முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்கான சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரீட்சிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஆலோசனைக் குழுவொன்றினைத் தாபித்துள்ளது. 

    இக்குழு வியாபாரத் துறையிலிருந்து நான்கு (04) புகழ்பெற்ற நிபுணர்களை உள்ளடக்குவதுடன் சிபிசி பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், கொமா்ஷல் பேங் ஒப் சிலோன் பிஎல்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநருமான திரு. தர்ம தீரசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக பிரைஸ்வோட்டஹவுஸ்கூப்பர்ஸின் முகாமைத்துவப் பங்காளர்  திரு. சுஜீவ முதலிகே; மூரேஸ் ஸ்டீபன் கன்ஸ்சல்டிங் (பிறைவெட்) லிமிடெட் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. திசான் சுபசிங்க் மற்றும் அமரசேகர அன்ட் கம்பனி பட்டயக் கணக்காளர்களின் சிரேஷ்ட பங்காளர்  (கணக்காய்வு மற்றும் உத்தரவாதம்) திரு. தியாகராஜா தர்மராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • CBSL Successfully Completes the Process of Developing and Testing a Blockchain Technology based Shared Know-Your-Customer (KYC) Proof-of-Concept (POC)

    பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கரு அறிக்கை 2021 ஒத்தோபர் 25 அன்று தேசிய கொடுப்பனவு சபையின் தலைவர், இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திருமதி இவட் பெர்னாந்து மூலம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவம் மற்றும் அலுவலர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன் சாத்தியப்பாட்டு எண்ணக்கருப் பரிசோதனையில் ஈடுபட்ட வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் மூன்று சாத்தியப்பாட்டு எண்ணக்கரு விருத்தியாளர் குழுக்களும் மெய்நிகராகப் பங்கேற்றனர். 

  • Ill-Timed and Unacceptable Rating Action by Moody’s Renews Concerns of Subjectivity

    மூன்று மாதங்களுக்கு முன்னர் இதேவிதத்தில் தரம் குறைப்பதற்கான மீளாய்வின் கீழ் இடம்பெறச் செய்யப்பட்டதன் பின்னர் தரப்படுத்தல் நடவடிக்கைக்கு இட்டுச்சென்ற மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ் (மூடீஸ்) இன் அண்மைய கணிப்பீடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வலுவான அதிருப்தியினை வெளிப்படுத்துகின்றது. மீண்டுமொரு தடவை இலங்கை தொடர்பில் மூடீஸ் இன் நியாயப்படுத்த முடியாத தரப்படுத்தல் நடவடிக்கையானது 2022 இற்கான அரசாங்க வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படுகின்ற முக்கிய நிகழ்வுக்கு முன்னர் சில நாட்களே உள்ள நிலையில்; வெளியிடப்பட்டுள்ளதுடன் இது, வெளிப்படையாகவே அவசரமானதும் வரவுசெலவுத்திட்டத்தின் தன்மையானது அரசாங்கத்தின் நிதியளித்தல் திட்டத்திற்கு பெருத்தமற்றது என்பது மூடீஸ் பகுப்பாய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்பட்ட கருத்தான அத்தகைய பகுப்பாய்வாளர்களின் குறைவான புரிந்துணர்வினைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

  • Beware of Financial Scams

    ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது/ மற்றும் உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை அவர்கள் வழங்குவார்கள் என்றும் கூறுகின்றதாகத் தோன்றுகின்றதான சில மோசடிகள் தொடர்பான தகவல்களை அண்மைக் காலமாக இலங்கை மத்திய வங்கி பெற்று வருகிறது. சில சமயங்களில் அவர்கள் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி மட்டுமே இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

  • LANKAQR Nationwide Rollout Campaign

    நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறையொன்றாக சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் அதேபோன்று நுகர்வோர் மத்தியில் LANKAQR கொடுப்பனவுகளை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் LANKAQR தேசியளவில் பிரபல்யப்படுத்தும் பிரச்சாரம் இலங்கை மத்திய வங்கியில் 2021 ஒத்தோபர் 25 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

  • Progress of Securing Foreign Exchange Inflows as announced in the Six-Month Road Map for Ensuring Macroeconomic and Financial System Stability

    இலங்கை மத்திய வங்கி பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பின்வரும் தகவல்களை வழங்கவிரும்புகின்றது.

    இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் ஏனைய அரசாங்கங்கள்இ மத்திய வங்கிகள்இ  நிதியியல் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடி ஈடுபாடுகளின் தொடரொன்றினை ஆரம்பித்துள்ளன.

  • Meeting between the Governor of the Central Bank of Sri Lanka (CBSL) and Governor of Qatar Central Bank (QCB)

    இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

Pages