தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 செத்தெம்பரில் விரிவடைந்தன
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 9.2 சுட்டெண் புள்ளிகளால் அதிகரித்து 2021 செத்தெம்பரில் 54.3 ஆக மீளத்திரும்பியது. புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக மேம்பாடுகள் இவ்வதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தன.
பணிகள் கொ.மு.சுட்டெண், 2021 ஓகத்தில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியின் பின்னர் 2021 செத்தெம்பரில் 52.2 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதியினை அறிக்கையிட்டு வளர்ச்சி பாதையில் நுழைந்தது. இதற்கு, புதிய வியாபாரங்கள், நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அதிகரிப்புக்கள் துணையளித்தன.









இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில் அவர்களின் நேரத்தையும் செலவையும் மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும் தனியொரு மூலமாக இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.