முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்கான சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரீட்சிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை ஆலோசனைக் குழுவொன்றினைத் தாபித்துள்ளது.
இக்குழு வியாபாரத் துறையிலிருந்து நான்கு (04) புகழ்பெற்ற நிபுணர்களை உள்ளடக்குவதுடன் சிபிசி பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், கொமா்ஷல் பேங் ஒப் சிலோன் பிஎல்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநருமான திரு. தர்ம தீரசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக பிரைஸ்வோட்டஹவுஸ்கூப்பர்ஸின் முகாமைத்துவப் பங்காளர் திரு. சுஜீவ முதலிகே; மூரேஸ் ஸ்டீபன் கன்ஸ்சல்டிங் (பிறைவெட்) லிமிடெட் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. திசான் சுபசிங்க் மற்றும் அமரசேகர அன்ட் கம்பனி பட்டயக் கணக்காளர்களின் சிரேஷ்ட பங்காளர் (கணக்காய்வு மற்றும் உத்தரவாதம்) திரு. தியாகராஜா தர்மராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.









இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.