இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கடந்து செல்வதில் இலங்கையின் வெற்றிக்கதையை எடுத்துக்காட்டும் வகையிலும் நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை 2025 மே 23 அன்று கொழும்பில் நடாத்தியது. பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிபுணத்துவம்மிக்கவர்களை ஒன்றிணைப்பதன் வாயிலாக, நிதியியல் உறுதிப்பாட்டு சவால்கள் மற்றும் கொள்கைப் பதிலிறுப்புக்கள் மீதான அனுபவங்களையும் நுண்நோக்குகளையும் பகிர்ந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பொன்றினை இம்மாநாடு வழங்கி உள்நாட்டு ஆர்வலர்களுக்கும் சர்வதேச பங்கேற்பாளர்களுக்கும் நன்மையளிக்கின்றது.
-
Central Bank of Sri Lanka holds the Financial Stability Conference to celebrate the 75th Anniversary
-
Central Bank of Sri Lanka hosted the FSB RCG Asia Meeting in Colombo on 22 May 2025
ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2025 மே 22 அன்று கொழும்பில் கூடியது. 2024 ஏப்பிறலில் ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி இக்கூட்டத்தை இரண்டாவது முறையாக நடாத்தியது.
-
The Central Bank of Sri Lanka further reduces the Overnight Policy Rate (OPR)
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளால் 7.75 சதவீதமாகக் குறைக்கத் தீர்மானித்து, இதன் மூலம் நாணயக் கொள்கையை மேலும் தளர்த்துகின்றது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – April 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகாலரீதியான சுருக்கத்தையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டுகின்றன.
-
Central Bank of Sri Lanka Launches the Sustainable Finance Roadmap 2.0
இலங்கை மத்திய வங்கி நிலைபெறத்தக்க நிதி வழிகாட்டல் 2.0 இனை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2025 மே 05 அன்று அங்குரார்ப்பணம் செய்து, காலநிலை – தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் சமூக ரீதியாக அனைவரையும் உள்ளடக்குகின்ற நிதியியல் முறைமையினை பேணி வளர்த்தல் என்பவற்றுக்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் முக்கிய மைல்கல்லொன்றினை அடையாளப்படுத்தியது.
-
External Sector Performance – March 2025
2023 சனவரியில் மாதாந்த நடைமுறைக் கணக்கு புள்ளிவிபரங்களைத் தொகுக்கத் தொடங்கியதிலிருந்து பதிவுசெய்யப்பட்ட அதியுயர்ந்த மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகையுடன் இலங்கைப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையானது 2025 மாச்சில் தொடர்ந்தும் வலுவடைந்தது.
-
CCPI in April 2025 signals a further easing of deflationary conditions
இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைய 2025 மாச்சில் தொடங்கிய பணச் சுருக்க நிலைமைகளின் தளர்வு 2025 ஏப்பிறலிலும் தொடர்ந்தது. இதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2025 மாச்சில் பதிவாகிய 2.6 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஏப்பிறலில் 2.0 சதவீதம் கொண்ட மெதுவான பணச்சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.
-
Sri Lanka PMI - Construction indicates an expansion in March 2025
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 மாச்சில் 54.3 பெறுமதியைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்கப் பணியில் தொடர்ச்சியான விரிவடைதலினை அநேகமான அளவீட்டுப் பதிலிறுப்பாளர்கள் அறிக்கையிட்டனர். நிலையான விலைகள் மற்றும் சாதகமான வானிலை நிலைமைகளுடன்கூடிய ஆக்கபூர்வமான சூழல் இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
-
The Central Bank of Sri Lanka Releases the Publication on Financial Statements and Operations for the Year 2024
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 99(2)ஆம் பிரிவின் கீழான தேவைப்பாடான 2024ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் எனும் வெளியீடு சனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அதிமேதகு அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று அதாவது, 2024 ஏப்பிறல் 29 அன்று கையளிக்கப்பட்டது.
-
CBSL Governor and Secretary to the Treasury represent Sri Lanka at the Global Sovereign Debt Roundtable (GSDR)
பன்னாட்டு நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் இளவேனிற் காலக் கூட்டங்களின் பக்க நிகழ்வாக 2025 ஏப்பிறல் 23 அன்று வோசிங்டன் டி.சி யில் இடம்பெற்ற உலகளாவிய நாட்டுக்கான படுகடன் வட்டமேசைக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரிக்கான செயலாளர் திரு கே. எம். எம் சிறிவர்த்தன ஆகியோர் பங்கேற்றனர்.