தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 ஒத்தோபரின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பஙக்ளித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின்மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செத்தெம்பரின் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.









இலங்கை மத்திய வங்கியின் 9ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு 2016 திசெம்பர் 2ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாடானது, சமகால தொனிப்பொருட்களின் மீதான ஆராய்ச்சிகளைத் தூண்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்த வேளையில் மத்திய வங்கித்தொழில் மற்றும் பேரணட் பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பான விடயஙக் ள் மீது மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் நாணய அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்கள் அவற்றின் அண்மைக்கால கோட்பாட்டு ரீதியான அம்சங்களையும் அனுபரீதியான ஆய்வுகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு அரங்கினை உருவாக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.