• IMF Reaches Staff-Level Agreement on the Third Review of Sri Lanka’s Extended Fund Facility

    இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிக்கும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

  • Monetary Policy Review - December 2016

    இலங்கை தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்டி, 2016இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 5.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 4.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2016இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் பணிகள் துறை 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ள வேளையில் கைத்தொழில் நடவடிக்கைகள் 6.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தன. எனினும் வேளாண்மையுடன் தொடர்பான நடவடிக்கைகள; தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சுருக்கத்தினைப் பதிவு செய்து 1.9 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு 2016இன் மூன்றாம் காலாண்டில் நிலவிய மோசமாக வானிலை நிலமைகளின் தாக்கமே காரணமாகும்.

  • Dr. Indrajit Coomaraswamy is named Central Bank Governor of the Year, South Asia by Global Capital Markets publication

    இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாண்டிற்கான சிறந்த தென்னாசியாவிற்கான ஆளுநராக 2017 ஒத்தோபர் 14 அன்று வாசிங்கடன் டிசி இல் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க பிரசுரலாயமான குளோபல் கெப்பிட்டல் மார்க்கட்டின் விருது வழங்கும் வைபவத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது. இவ்விருது வழங்கும் வைபவம் உலக வங்கி – ப.நா. நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்துடன் ஒரே நேரத்தில் எதேச்சையாக இடம்பெற்றிருக்கிறது. உலகளாவிய மூலதனம் என்பது பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் பணியாற்றுகின்ற மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் முன்னிலைச் செய்திகளையும் கருத்துக்களையும் தரவுப் பணிகளையும் வழங்குமொன்றாகும்.

  • SL Purchasing Managers’ Index Survey - September 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பர் மாதத்தில் 59.0 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 ஒகத்து மாதத்துடன் ஒப்பிடும்போது 4.6 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது ஒகத்து 2017 உடன் ஓப்பிடும் போது செத்தெம்பர் 2017 இல் உயர்வான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. இவ் அதிகரிப்பானது, முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறைவிலிருந்து மீட்சியடைந்து புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினால் தொழில்நிலை துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  பிரதானமாக உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் புதிய கடட்ளைகள் துணைச்சுட்டெண்களும் செத்தெம்பரில் உயர்வான வீதத்தில் விரிவடைந்து காணப்பட்டன. கொள்வனவு இருப்புகளின் துணைச் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட மேலதிக இருப்புகளின் நிலைமை காரணமாக மெதுவான வேகத்தில் அதிகரித்து காணப்பட்டது.

  • IMF Staff Concludes Visit to Sri Lanka to Discuss Progress of Economic Reform Program

    தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

  • External Sector Performance - July 2017

    இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது நிதியியல் கணக்கிற்கான அதிகரித்த ஏற்றுமதிகள் மற்றும் உட்பாய்ச்சல்களினால் தொடர்ந்தும் மேம்பாடடைந்தது. எனினும், ஏற்றுமதி வருவாய் அதிகரித்தமைக்கு மத்தியிலும் உயர்ந்தளவான இறக்குமதிச் செலவினங்கள் காரணமாக, 2017 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2016இன் இதையொத்த மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்துள்ளது. யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் அதிகரித்த வேளையிலும் சுற்றுலா வருவாய்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது, கடந்த நான்கு மாதங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கினை மாற்றியுள்ளது.

  • Clarification by the Central Bank of Sri Lanka on Misleading News Reports on a Comment made by the Governor

    2017ஆம் ஆண்டில் அதிகரித்த பணவீக்கத்திற்கான காரணமாக பெறுமதிசேர் வரியிலான சீராக்கங்களை ஊடக அறிக்கைகள் கோடிட்டுக் காட்டியுள்ளதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. 

  • Monetary Policy Review - No. 6 of 2017

    Considering developments and outlook in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 25 September 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.

    Given below are the key factors that the Monetary Board considered in arriving at the decision.

  • Inflation in August 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஓகத்தில் 7.9 சதவீதத்திற்கு 2017 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து அதிகரித்தது. 2017 ஓகத்தின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 யூலை 6.2 சதவீதத்திலிருந்து 2017 ஓகத்தின் 6.5 சதவீதத்துக்கு அதிகரித்தது.

  • SL Purchasing Managers’ Index Survey - August 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒகத்து மாதத்தில் 54.4 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 0.1 சுட்டெண் புள்ளிகளாலான  ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இவ் அதிகரிப்பானது, மாதகாலப்பகுதியில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவான செயற்பாட்டாலும் மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படுவதற்காக ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கட்டளைகளை பூர்த்தி செய்வதற்கான பராமரிக்கப்படுகின்ற மேலதிக இருப்புகளின் காரணமாக கொள்வனவு இருப்பு துணை சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பினால்  உந்தப்பட்டது. நிரம்பலர் வழங்கல் நேரம் பிரதானமாக சில நிறுவனம் சார்ந்த விசேடமான தடைகளினால் நீட்சியடைந்தது.  அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக, பிரதானமாக ஆடை சார் துறையில் தொழில்நிலை சுட்டெண் குறைவடைந்து காணப்பட்டது.

Pages