• Inflation in May 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைத்துறை தவிர்ந்த உணவல்லா அனைத்து வகைகளும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.  

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

  • Monetary Policy Review - June 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2016இன் முதற்காலாண்டில், உண்மை நியதிகளில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்பொருளாதார வளர்ச்சிக்கு, கூட்டப்பட்ட பெறுமதி நியதிகளில், 2016இன் முதற்காலாண்டில் முறையே 8.3 சதவீதத்தினாலும் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்த கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளே பெரும் உதவியாக அமைந்தன. அதேவேளையில், இக்காலப்பகுதியில் வேளாண்மையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1.9 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சி வீதம் இவ்வாண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியுடன் பெருமளவிற்கு ஒத்துச்செல்வதாகக் காணப்பட்டது.  

  • Commencement of Compensation Payment to CIFL Depositors

    நாணயச் சபையானது சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிதி வியாபாரச் சட்டத்தின் 37(3)ஆம் பிரிவிற்கமைய 2018.03.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்தது.

    2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க (திருத்தப்பட்டவாறு) இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளிற்கமைய (இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகள்) 2018 ஓகத்து 27 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என்பதை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. 

  • Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with Insurance Regulatory Commission of Sri Lanka

    2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு, காப்புறுதித் துறையில், பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வு மேற்பார்வையின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 ஓகத்து 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.

  • External Sector Performance - June 2018

    இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2018 யூனில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. யூன் மாத காலப்பகுதியில் உண்மை நியதிகளிலான வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டுப்பகுதியில் குறைவான மட்டத்தைப் பதிவுசெய்த போதிலும் இறக்குமதிச் செலவினங்களின் வளர்ச்சியானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விட கூடுதலாகக் காணப்பட்டதன் விளைவாக 2017 யூனில் வர்த்தகப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்களவில் விரிவடைந்தது. 2017 யூனுடன் ஒப்பிடும் போது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறைவடைந்த போதிலும் ஆண்டின் ஆரம்பத்தில் அவதானிக்கப்பட்ட வளர்ச்சிப் போக்கின்படி 2018 யூனில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது.

  • Inflation in July 2018

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைந்த அடிப்படை மற்றும் உணவல்லா வகைப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாக தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூனின் 5.3 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 5.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

  • Clarification on the EPF’s equity investment in Weligama Hotel Properties Limited (WHPL)

    அண்மைக்கால ஊடக அறிக்கைகள் மற்றும் ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தாய்க் கம்பனியான ஈஸ்ட் வெஸ்ட் புறப்பட்டீஸ் பிஎல்சியினால் கொழும்பு பங்குச் சந்தைக்கான கம்பனி வௌிப்படுத்தல்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் வேண்டப்படுகின்றது.

  • Clarification on Lending to an Entity (Concern) Where the Director of a Bank has an Interest

    கடந்த அண்மைக் காலத்தில் அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எழுப்பப்பட்ட கரிசனைகளைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியானது, உரிமம் பெற்ற வங்கியொன்றின் (வங்கி) பணிப்பாளரொருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் நிறுவனம் அல்லது நபருக்கு கடன் வழங்குதல் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடைமுறைகளைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

  • Sri Lanka Purchasing Managers’ Index - July 2018

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 57.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து  2018 யூலையில்  57.2 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட சிறிதளவான மெதுவடைதலானது, விசேடமாக உணவு மற்றும் குடிபானம் மற்றும் புடவை மற்றும் அணியும் ஆடைகள் துறையில் காணப்பட்ட அதிகளவிலான தொழிலாளர்களின் புரள்வு காரணமாக திறனற்ற தொழிலாளர்களின் பிரதியிடுதலில் காணப்பட்ட இடர்பாடுகளின் காரணமாக தொழில்நிலையின் மெதுவடைதலினால் உந்தப்பட்டது. மேலும், 2018 யூலையில் புதிய கட்டளைகள் சிறிதளவில் மெதுவடைந்திருந்தது. எவ்வாறாயினும், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்பு விசேடமாக இரசாயன மற்றும் மருந்தாக்கல் பொருட்களின் உற்பத்தியில் அடுத்த மூன்று மாத அளவில் எதிர்பார்க்கப்படுகின்ற சாதகமான தோற்றப்பாடு காரணமாக மேம்பாடொன்றினை காண்பித்தது.

  • Regulatory Action on a Primary Dealer - Pan Asia Banking Corporation PLC

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசோி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில் 2018 ஓகத்து 15ஆம் திகதி மு.ப 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகா் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

Pages