வழிகாட்டல் 2018 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகளுக்காக வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டவாறு, 2018 செத்தெம்பர் 28 வெள்ளிக்கிழமை வெளியிடுவதற்காக முன்னரே அட்டவணைப்படுத்தப்பட்ட 2018இன் 6ஆவது நாணயக்கொள்கை மீளாய்வானது 2018 ஒத்தோபர் 02ஆம் திகதி மு.ப 7.30 மணிக்கு மீள அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
-
Date of Announcement of the Monetary Policy Review - No. 6 of 2018
-
Margin Deposit Requirement against Letters of Credit (LCs) opened with Commercial Banks for the Importation of Vehicles
வர்த்தக நோக்கங்களுக்கல்லாத பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற மோட்டார் வாகன இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளில் திறக்கப்படுகின்ற நாணயக் கடிதங்களுக்கெதிராக உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் 100 சதவீத எல்லை வைப்புத் தேவைப்பாடொன்றினை இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை விதித்துள்ளது. அதற்கமைய, இவ்வாகன வகுப்புகளின் இறக்குமதிக்கான நாணயக் கடிதங்கள் குறைந்தபட்சம் 100 சதவீத காசு எல்லையுடன் மாத்திரம் மேற்கொள்ளக்கூடியதாகும்.
எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானமானது தீர்க்கப்படாவிடின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை அச்சுறுத்தக்கூடிய அண்மைக்கால அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:
-
The Central Bank of Sri Lanka meets the People of Rajarata and Wayamba
இரஜரட்டை மற்றும் வயம்ப பிராந்திய மக்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மத்திய வங்கி சேவைகளின் இலகுவான கிடைப்பனவை மற்றும் மத்திய வங்கியின் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட பொதுமக்களுக்கான சேவைநாள் நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலக வளாகத்திலும் மற்றும் அனுராதபுர பொது மைதானத்திலும் (சல்காடோ) 2018 செத்தெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
-
Clarification on the Erroneous Report regarding Sri Lanka issued by Nomura Holdings Inc.
இலங்கை உள்ளிட்ட ஏழு வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் செலாவணி வீத நெருக்கடி இடர்நேர்வில் காணப்படுகின்றன என்பதனை காண்பிக்கின்ற நொமுறா கோல்டிங்ஸ் இன்ங் மூலமான பகுப்பாய்வொன்றினை பல பன்னாட்டு ஊடகத் தளங்கள் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன.
இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் ஐ.அ.டொலர் 160 பில்லியன் வரை உயர்வானது எனக் குறிப்பிடுகின்ற அறிக்கையினை சொல்லப்பட்ட ஊடகத் தளங்கள் மேலும் எடுத்துக்காட்டியுள்ளன. இலங்கையின் குறுகியகால வெளிநாட்டுப் படுகடன் எவ்விதத்திலேனும் இத்தொகைக்கு அண்மித்துக் காணப்படாமையினால், இலங்கை மத்திய வங்கியானது தமது கணிப்புகளில் உள்ள பிழைகளைச் சரிசெய்யுமாறு நொமுறா இனைக் கோரியது.1
-
Sri Lanka Purchasing Managers’ Index - August 2018
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 57.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 ஓகத்தில் 58.2 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்திருந்தது. ஓகத்தில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் தயாரிப்பு துறையில் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் வழிநடத்தப்பட்ட உற்பத்தியின் அதிகரிப்பினால் பிரதானமாக உந்தப்பட்டது. மேலும், தொழில்நிலையும் புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினூடாக ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக உணவு மற்றும் குடிபான துறையினுள் நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கான சாதகமான எதிர்பார்க்கையினால் வழிநடத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொள்வனவுகளின் இருப்பு, ஒரு மெதுவடைதலை காண்பித்ததுடன் விசேடமாக ஏனைய உலோகமல்லாத கனிப்பொருள் உற்பத்திகளின் தயாரிப்பு நடவடிக்கைளில் உணரப்பட்டது.
-
Statement of the Monetary Board on Treasury Bond Auctions
இது, 2016 மாச்சு பிற்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பான அண்மைய கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பானதாகும். இக்கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் போதுமானளவிற்கு வெளிப்படையான தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளை ஏலமிடுவது தொடர்பில் 2015 பெப்புருவரியிலிருந்து முழுமையாகச் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகளைப் போன்ற நடைமுறைகளே இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கிறது என்ற உண்மையின்பால் பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.
-
IMF Approves USD 1.5 Billion Extended Fund Facility for Sri Lanka
இலங்கையின் சென்மதி நிலுவையின் நிலைமைக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த செயற்றிட்டத்திற்கு ஆதரவாகவும் சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 1.1 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) பெறுமதியான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு 2016 யூன் 03 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது. இத்தொகையானது பன்னாட்டு நாணய நிதியத்தினுடனான நாட்டின் தற்போதைய பொறுப்புப் பங்கின் 185 சதவீதத்திற்கு சமமானது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 119.9 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 168.1 மில்லியன்) பெறுமதியான முதலாவது தொகுதி இலங்கைக்கு உடனடியாக கிடைக்கதக்கதாக செய்யப்படும். எஞ்சிய தொகையானது மூன்று ஆண்டுகளைக்கொண்ட காலப்பகுதியில் ஆறு தொகுதிகளாக வழங்கப்படுவதுடன், கடைசி தொகுதியானது 2019 ஏப்பிறலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Release of 'Economic and Social Statistics of Sri Lanka - 2018' Publication
இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2018 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
-
Clarification Regarding False Information Published in the Media About Expenses Incurred by the Governor of the Central Bank of Sri Lanka
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச நிதியினைப் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரொருவரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரோ அல்லது வேறு எந்தவொரு அலுவலருமோ தமது சொந்தச் செலவுகளுக்காக அரச நிதியினை பயன்படுத்தவில்லை என்பதனையும் எந்தவிதத்திலேனும் அரச நிதியினைத் தவறாகப் பயன்படுத்தவில்லையெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுக் கொள்ளவிரும்புகின்றது. அனைத்து அலுவல்சார் கடமைகள் தொடர்பிலும் ஆளுநரும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கலந்துகொள்ளும் நிகழ்வுடன் தொடர்பிலுமான செலவினங்கள் மற்றைய அமைச்சு அல்லது திணைக்களங்களின் பொதுவான நடைமுறைகளை ஒத்தவிதத்திலேயே மத்திய வங்கியினாலும் வழங்கப்படுகின்றன.
-
External Sector Performance - February 2016
வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தமை, சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வடிவில் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் என்பன தொடர்ந்தும் உறுதியான வேகத்தில் வளர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 பெப்புருவரி மாத காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இம்மாத காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்தபோதும், எரிபொருள் இறக்குமதிகள், உணவு மற்றும் குடிபானங்கள் மற்றும் போக்குவரதது; சாதனங்கள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் சுருக்கத்தினை ஏற்படுத்தின. எனினும், அரச பிணையஙக்ள் சந்தையும 'கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும்' இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவு செய்தன.