இலங்கை அரசாங்கம், 2018 மாச்சில் ஐக்கிய அமெரிக்க டொலர் அல்லது யப்பானிய யென் அல்லது யூரோ நாணய இன வகையில் குறித்துரைக்கப்பட்ட அல்லது அவை இணைந்த ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் வரையிலான வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதியொன்றிற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகள் மற்றும் முதலீட்டு இல்லங்களுக்கு அழைப்பு விடுத்தது.
-
The Government of Sri Lanka secured USD 1 Billion Foreign Currency Term Financing Facility
-
Sri Lanka Purchasing Managers' Index - September 2018
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2018 ஓகத்தில் பதிவு செய்யப்பட்ட 58.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 செத்தெம்பரில் 54.1 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்திருந்தது. செத்தெம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலுக்கு புதிய கட்டளைகள் மற்றும் தயாரிப்பில் விசேடமாக உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக தூண்டப்பட்டது. உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி தேய்வினூடாக இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப்பொருட்களின் அதிகரித்திருந்த உள்நாட்டு செலவினம் காரணமாக இக்காலப்பகுதியில் விற்பனை விலைகளை அதிகரிக்க நேரிட்டது என பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இது அவர்களுடைய பொருட்களுக்கான கேள்வியினை குறைத்ததுடன், இதன் விளைவாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தன. எவ்வாறாகினும், பிரதானமாக ஏற்றுமதி சார்ந்த புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி இக்காலப்பகுதியில் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பும் மெதுவடைந்திருந்தது. அதேவேளை, நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தில், நீட்சியடைந்த நிரம்பலர் நேரமானது உற்பத்தியாளர்களின் உள்நாட்டு நாணய பெறுமதி தேய்வின் முன்னோக்கிய உறுதித்தன்மை எதிர்பார்க்கப்பட்டமை காரணமாக தாமாகவே உள்நாட்டு பொருட்களின் கிடைப்பனவு நேரத்தினை அதிகரித்தமையினால் ஏற்பட்டதாகும். ஆகையால், இது பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கத்தினை குறித்துக்காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 எல்லைக்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒகத்துடன் ஒப்பிடுகையில் செத்தெம்பரில் மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினைக் காண்பித்தது.
-
Progress on Implementation of the Recommendations of the Presidential Commission of Inquiry to Investigate, Inquire and Report on the Issuance of Treasury Bonds (COI) during the period from 1 Feb 2015 to 31 March 2016
மத்திய வங்கியனாது, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் திறைசேரி முறிகள் வழங்கல் பற்றிய பரிந்துரைகளுக்கிசைவாக இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களில் வெளிப்படைத்தன்மையினையும் பொறுப்புக்கூறலினையும் வலுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றது.
மத்திய வங்கி தொழிற்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பு தொடர்பில் மத்திய வங்கிக்கு ஏற்புடையதான பல சட்டங்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாணயவிதிச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் தொடர்பில் திருத்தங்கள் முறைப்படுத்த்தப்பட்டு வருகின்றன.
-
The Central Bank Responds to Misleading Newspaper Articles on Rupee Depreciation
இலங்கை மத்திய வங்கி, 2018 ஒத்தோபர் 08 மற்றும் 09ஆம் திகதிய செய்தித்தாள்கள் பலவற்றில் வெளிவந்த ''ரூபாவின் பெறுமானத் தேய்வினை கையாள இயலாமல் இருப்பதன் மூலம் அரசாங்கமும் மத்திய வங்கியும் மிக முக்கியமான சட்ட ரீதியான கடமைகளை கைவிட்டிருக்கின்றன". என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றது.
-
External Sector Performance - July 2018
இலங்கையின் வெளிநாட்டுத் துறை, 2018 யூலையில் மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. ஏற்றுமதி வருவாய்கள் மாதகாலத்தில் ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சியதற்கு மத்தியில் உயர் இறக்குமதிச் செலவினத்துடன் 2018 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) தொடர்ந்தும் விரிவடைந்தது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மிதமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் சிறிதளவால் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. நிதியியல் கணக்கு, யூலையில் மிதமான உட்பாய்ச்சலினை பதிவுசெய்த அதேவேளை, கடன் தீர்த்தல் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய வெளிப்பாய்ச்சல்கள் என்பன 2018 யூலை இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 8.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தன. வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல் மற்றும் இறக்குமதிகளுக்காக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக் கேள்வி என்பவற்றுடன் தொடர்ந்தும் அழுத்தத்தின் கீழ் காணப்பட்டதுடன் செலாவணி வீதத்தில் நாளுக்குள்ளான மிகைத் தளம்பலினைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கியின் தலையீட்டினை அவசியப்படுத்தியது.
-
IMF Staff Completes Review Mission to Sri Lanka
End-of-Mission press releases include statements of IMF staff teams that convey preliminary findings after a visit to a country. The views expressed in this statement are those of the IMF staff and do not necessarily represent the views of the IMF’s Executive Board. Based on the preliminary findings of this mission, staff will prepare a report that, subject to management approval, will be presented to the IMF's Executive Board for discussion and decision.
-
Inflation in March 2016
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 பெப்புருவரியின் 1.7 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவல்லா வகையே முக்கியமாகப் பங்களித்தது. பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் (உந்து ஊர்திக் காப்புறுதி); வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; போக்குவரத்து; ஆடை மற்றும் காலணி ஆகிய துணை வகைகளின் விலைகள் ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பிற்கு முக்கியமாகப் பங்களித்தன.
-
Repatriation of Payments Received for Goods Exported from Sri Lanka
நாட்டிற்கான வெளிநாடடு; செலாவணி உட்பாய்ச்சல்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தற்போதைய கொள்கை வழிமுறைகளின் ஒரு பகுதியாக மான்புமிகு நிதியமைச்சர் பின்வருவனவற்றை கொண்டிருக்கும் 2016 ஏப்பிறல் 01ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 1960/66 கொண்ட வர்த்தமானி அறிவித்தலை (அதிவிசேட) வெளியிட்டிருக்கின்றார்.
-
Monetary Policy Review - April 2016
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் (2006/2007=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 பெப்புருவரியின் 2.7 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 2.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். ஆண்டுச் சராசரியொன்றின் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் முன்னைய மாதத்தின் 0.9 சதவதீத்திலிருந்து 2016 மாச்சில் 1.1 சதவீதம் வரையில் உயர்வுற்றது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக்கொணட் ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் முன்னைய மாதத்தின் 1.7 சதவீத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 2.2 சதவீதமாகவும் ஆண்டுச் சராசரி அடிப்படையில் 2.4 சதவீதமாகவும் காணப்பட்டது.
-
The Annual Report of the Central Bank of Sri Lanka for the Year 2015
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்தாறாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜுன மகேந்திரன் அவர்களால் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதம மந்திரி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.