• IMF Reaches Staff Level Agreement with Sri Lanka on Three-Year $1.5 Billion EFF

    தூதுக்குழுவின் விஜயத்தின் முடிவிலான பத்திரிக்கை வெளியீடானது ஆரம்ப விடயங்களைத் தெரிவிக்கும் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுக்களின் அறிக்கைகளை உளள் டக்கியிருக்கிறது. இவ்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துகக் ளேயன்றி பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபையின் கருத்துகக் ளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகாதிருக்கலாம். இத்தூதுக்குழுவின் ஆரம்ப கண்டறிதல்களின் அடிப்படையில், முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு அலுவலர்களினால் தயாரிக்கப்படும் அறிக்கையானது. கலந்துரையாடலுக்கு தீர்மானமெடுத்தலுக்குமாக, பன்னாட்டு நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

  • Appointment of New Assistant Governors

    நாணயச் சபை, 2016 ஏப்பிறல் 05ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் செல்வி கே சரவணமுத்து மற்றும் திரு ஈ ஏ எட்டியாராச்சி, திரு ஆர் ஏ ஏ ஜெயலத்; திரு கே எம் எம் சிறிவர்த்தன மற்றும் திரு எஸ் ஜே ஏ கந்தகம ஆகிய ஐந்து உயர் அலுவலர் வகுப்பு தரம் ஐஏ அலுவலர்களை முறையே 2016 ஏப்பிறல் 05, 2016 ஏப்பிறல் 16, 2016 யூன் 12 மற்றும் 2016 யூன் 18ஆம் திகதிகளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உதவி ஆளுநர்களாகப் பதவி உயர்த்தியிருக்கிறது. இப் பதவி உயர்வுகள் வங்கியின் தொடர்ச்சியான திட்டத்திற்கு அமைவாகவும் மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  • The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates at Current Levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2018 ஒத்தோபர் 01இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 7.25 சதவீதமாகவும், 8.50 சதவீதமாகவும் தொடர்ந்தும் காணப்படும்.   

    வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்தும் நோக்குடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரங்களின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளைக் கரிசனையுடன் கருத்திற் கொண்டு நாணயச் சபையானது மேலே கூறப்பட்ட தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 

  • External Sector Performance - January 2016

    2016 சனவரி மாதகாலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2016 சனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களின் வடிவிலமைந்த வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வளர்ச்சியினைப் பதிவுசெய்ததுடன் தொழிலாளர் பணவலுப்பல்களிருந்தான உட்பாய்ச்சல்களும் மேம்பட்டன. 2016 சனவரி காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் எரிபொருள், ஊர்திகள் மற்றும் அரிசி இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இறக்குமதிச் செலவினங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்வாக இருந்தமையின் விளைவாக வர்த்தகப்பற்றாக்குறை சுருக்கமடைந்தது.  எனினும்,  அரச பிணையங்கள் சந்தையும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையும் இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சலை பதிவுசெய்தன.

  • IMF Staff Concludes Visit to Sri Lanka to Discuss Progress of Economic Reform Program - September 27, 2018

    தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அவர்கள் கண்டறிந்த பூர்வாங்க விடயங்களை அறிவிக்கின்ற அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு, சபைக் கலந்துரையாடல் ஒன்றிற்கு வழிவகுக்காது.

  • Monetary Policy Review - May 2016

    விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுகோலாக  விளங்கியதுடன், இதில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் முன்னைய மாதத்தின் 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 27.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. கொடுகடனின் துறைவாரியான பகிர்ந்தளிப்பினைப் பொறுத்தவரையில், கைத்தொழில் மற்றும் வணிகத் துறைகள் கொடுகடன் பகிர்ந்தளிப்பில் உயர்நத் மட்டங்களை கவர்ந்து கொண்ட வேளையில் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களும் கணிசமான அதிகரிப்பினைப் பதிவு செய்தன.

  • Opening of Bank Accounts for the Disaster Relief Fund of the Government of Sri Lanka

    2016 மேயில் நிகழ்ந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கையர்களிடமிருந்தும் வெளிநாட்டு தயாளசிந்தைபடைத்தவர்களிடமிருந்தும் நன்கொடைகளைச் சேகரிக்கப்படுவதற்கு வசதியளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் சம்பத் வங்கி பிஎல்சி இல் பின்வரும் கணக்குகளைத் திறந்திருக்கிறது.

  • Inflation in April 2016

    தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மார்ச்சின் 2.2 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்; வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் காலணிகள் தளபாடங்கள்; வீட்டுஉபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு உபயோகப் பொருட்கள்;  நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத்துறைகள் என்பன ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.   

  • Release of 'Sri Lanka Socio-Economic Data - 2018' Publication

    இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான ''இலங்கையின் சமூக பொருளாதார தரவுகள் 2018" என்ற அதன் தரவு ஏட்டினைத் தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது. இத் தொடரில் இது 41 ஆவது தொகுதியாகும். 

  • Inflation in August 2018

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2018 ஓகத்தில் உணவு விலைகளில் மாதாந்த வீழ்ச்சியினால் தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூலையின் 3.4 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 2.5 சதவீதமாக குறைவடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூலையின் 5.1 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்தில் 4.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

Pages