அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 

எமது தாய்நாட்டிற்கு உதவுவதற்கான அன்பளிப்புகள்

இலங்கைக்கு எதற்காக எனது பெருந்தன்மையான அன்பளிப்புகள் தேவைப்படுகின்றன?

நீங்கள் அறிந்து கொண்டவாறு, நாட்டில் குறைவடைந்த வெளிநாட்டு நாணய ஒதுக்குகள்; இலங்கையர்களுக்கு அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற நாளாந்த தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு பாரியளவான இடர்பாடுகளை தோற்றுவித்ததன் காரணமாக, அனைத்து இலங்கையர்களும் தற்போது சமூக, பொருளாதார, மற்றும் நிதியியல் போன்ற இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, இலங்கை மக்களால் முகங்கொடுக்கப்படும் இன்னல்களை இலகுபடுத்த உதவுவதற்காக உங்களுடைய வெளிநாட்டு நாணய அன்பளிப்புக்கள் எமக்கு மிகவும் தேவைப்படுகின்றன.

அன்பளிப்புச் செய்யக்கூடியவர்கள் யார்?

வெளிநாட்டில் வதிகின்ற அனைத்து இலங்கையர்களும் எந்தவொரு தேசத்தை சேர்ந்த அனைத்து நலன்விரும்பிகளும்.

எனது அன்பளிப்பை நான் எவ்வாறு அனுப்பிவைக்கலாம்?

நீங்கள் உங்களுடைய அன்பளிப்புத் தொகையை இலங்கை மத்திய வங்கிக்காக பேணப்படுகின்ற பின்வரும் எந்தவொரு வங்கிக் கணக்குகளிற்கும் வங்கி மாற்றலொன்றினூடாக அனுப்பிவைக்க முடியும்.    

  நாணயம்

வங்கியின் பெயர்

கணக்கு விபரங்கள்

1.

ஐ.அ.டொலர் (USD)

Deutsche Bank Trust Company Americas 

New York, NY USA

பெறுநர் கணக்குப் பெயர்  : Central Bank of Sri Lanka

கணக்குள்ள வங்கி : Deutsche Bank Trust Company Americas

Account Number : 04015541

Account Type : Demand Deposit Account(DDA)

Routing Number : 021001033

SWIFT CODE: BKTRUS33XXX

2.

யூரோ (EUR)

ODDO BHF Bank -

Frankfurt Am Main

Germany

பெறுநர் கணக்குப் பெயர்  : Central Bank of Sri Lanka

கணக்குள்ள வங்கி : ODDO BHF Bank

Account Number : 0000739854

IBAN : DE39500202000000739854

SWIFT CODE: BHFBDEFF500

3. ஸ்ரேலிங் பவுன் (GBP) HSBC London

பெறுநர் கணக்குப் பெயர் : Central Bank of Sri Lanka

கணக்குள்ள வங்கி : HSBC Bank Plc

Account Number : 39600144

Sort Code : 40-05-15

IBAN : GB48MIDL40051539600144

SWIFT: MIDLGB22XXX

4. ஸ்ரேலிங் பவுன் (GBP)

Bank of Ceylon (UK) LTD

London, UK 

பெறுநர் கணக்குப் பெயர்  : Central Bank of Sri Lanka

கணக்குள்ள வங்கி : Bank of Ceylon (UK) LTD

கணக்கு இலக்கம் : 88001249

Sort Code :40-50-56

IBAN : GB89BCEY40505688001249

SWIFT: BCEYGB2LXXX

5.* யப்பானிய யென் (JPY)

MUFG BANK

TOKYO

பெறுநர் கணக்குப் பெயர்  : Central Bank of Sri Lanka

கணக்குள்ள வங்கி : MUFG BANK

கணக்கு இலக்கம் : 653-0407895

SWIFT: BOTKJPJTXXX

6.*

அவுஸ்திரேலிய டொலர் 

(AUD)

Reserve Bank of Australia

பெறுநர் கணக்குப் பெயர்  : Central Bank of Sri Lanka

கணக்குள்ள வங்கி : Reserve Bank of Australia

கணக்கு இலக்கம் :  81736-4

BSB : 092002

SWIFT: RSBKAU2SXXX

*2022.04.23 அன்று வெளியிடப்பட்ட புதிய கணக்குகள்

அன்பளிப்புக்கான பயன்பெறுநர் முகவரியும் தொலைபேசி இலக்கமும் எவை?

முகவரி : இல. 30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு, 00100, இலங்கை
தொலைபேசி   : +94112477317

எனது அன்பளிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான ஒப்புதலை நான் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

இலங்கை மத்திய வங்கி மூலமான ஆரம்பப் பதிலிறுப்பிற்காக, தயவுசெய்து கொடுப்பனவு உறுதிப்படுத்தலின் படிமமொன்றை fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தொடர்புடைய கணக்கிற்கு நிதியங்கள் வரவுவைக்கப்பட்டதும் அவை, கொடுப்பனவு உறுதிப்படுத்தலுடன் இணக்கப்பாடு செய்யப்பட்டதன் பின்னர், உங்களுடைய அன்பளிப்பை உறுதி செய்கின்ற இரண்டாவது பற்றுசீட்டொன்றை நீங்கள் பெறுவீர்கள்.

எனது அன்பளிப்பு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக நான் இலங்கை மத்திய வங்கியை எவ்வாறு தொடர்புகொள்ள வேண்டும்?

fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சலூடாகவோ அல்லது +94768315782 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி விடுப்பதன் மூலமாகவோ எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ள முடியும்.

எனது அன்பளிப்பானது அத்தியாவசிய பெருட்களின் இறக்குமதிக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் என்பதை நான் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்?

இத்தகைய வாக்குறுதியின் கீழ் பெறப்படுகின்ற அனைத்து அன்பளிப்புக்களும் மருந்துபொருட்கள், எரிபொருள், மற்றும் உணவு போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடுள்ள பொருட்களின் இறக்குமதி நோக்கங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி உறுதியளிக்கின்றது.

அன்பளிப்புக்களின் பற்றுச்சீட்டுக்களினதும் பயன்பாட்டினதும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக ஆளுநரால் இலங்கை மத்திய வங்கியின் மூன்று மூத்த அலுவலர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது கிடைக்கப்பெறுகின்ற அனைத்து வெளிநாட்டு அன்பளிப்புகளின் நிதியியல் கூற்றுக்களையும் மாதாந்த அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் (https://www.cbsl.gov.lk ) என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தினூடாக வெளியிடுவதற்கு பொறுப்பாகவுள்ளது. மேலும், இத்தகைய கணக்குகளின் நிதியங்களுக்காக பற்றுச்சீட்டு மற்றும் பயன்பாடு என்பவை காலாந்தர அடிப்படையில் சுயாதீனமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கிடைக்கப்பெறும் தொகைகளை ஆகக்குறைந்தது வாரத்திற்கு இருமுறை இற்றைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள வெளியீடுசெய்கின்ற செயற்பாட்டை இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.