வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவதன் முக்கியத்துவம்  |  தேசிய பணவனுப்பல் மொபைல் செயலி  |  இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முன்மொழியப்பட்ட ஊக்குவிப்புக்கள் |  புள்ளிவிபரங்கள் |  முக்கிய இணைப்புக்கள்

தொழிலாளர் பணவனுப்பல்கள்

புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புக்கள்

தொழிலாளர் பணவனுப்பல்களின் நிலையான உட்பாய்ச்சல்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பணியாளருக்கும் அதேபோன்று நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் பணவனுப்பல்களின் முழு சாத்தியப்பாட்டை அடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முன்மொழியப்பட்ட ஊக்குவிப்புக்கள்

இலங்கை மத்திய வங்கியானது ஏனைய தொடர்புடைய அதிகாரிகளுடன் கூட்டிணைந்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோன்புகையை மேம்படுத்தும் பொருட்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்ற செயன்முறையில் தீவிரமாக ஈடுபடும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு தொழில் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பன்முகப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வங்கித்தொழில் துறை போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் உள்ள முக்கிய ஆர்வலர்களுடன் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய ஊக்குவிப்புக்கள் ஓய்வூதியத் திட்டம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த வட்டிக் கடன்கள் அத்துடன் அதிகரித்த தீர்வையற்ற சலுகைகள் போன்ற வங்கித்தொழில் வசதிகளை உள்ளடக்குகின்றன.