கொரோனா வைரஸ் (கொவிட்-19) வெளித்தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக ஒரு புதிய வசதி - (“சௌபாக்யா கொவிட்-19மீளெழுச்சி வசதி”)

டைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் வாழ்க்கை நிலைமைகளை மற்றும் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை மீட்டெடுக்கும் பொருட்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) இன் வெளித்தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் மீளெழுச்சியின் தேசிய ரீதியிலான  முக்கியத்துவத்தினை அடையாளம்கண்டு, இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் கீழ் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக சௌபாக்யா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் ஒரு புதிய மீள்நிதியிடல் வசதிப்படுத்தலினை அறிமுகப்படுத்துகிறது. (“சௌபாக்யா கொவிட்-19 மீளெழுச்சி வசதி”). இந்த சலுகைக்கு உயர்ந்தளவிலான கேள்வி காணப்படுகின்றமையினால், ஒதுக்கப்பட்ட ரூ. 50 பில்லியன் தொகையானது ரூ. 150 பில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவரையறையானது 31.08.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

 

சௌபாக்யா கொவிட்-19 மீளெழுச்சி வசதியின்” முக்கிய அம்சங்கள்;

 

நடைமுறைப்படுத்தும் முகவர்

இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்

செயற்பாட்டுப் பிரதேசம்

தீவு முழுவதும்

பங்குபற்றும் நிதியியல் நிறுவனங்கள்

உரிமம்பெற்ற வங்கிகள்

அதிகபட்ச கடன் வரையறை

இரண்டு மாதங்களுக்கான  தொழிற்பாட்டு மூலதனத் தேவைப்பாடு

தகுதியுடைய துணைக் கடன் பெறுநர்கள்

* 2020ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க நாணயச் சபையின் சுற்றுநிருபத்தின் 2ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டவாறு கொரோனா வைரஸ் (கொவிட்-19) வெளித்தாக்கத்திற்கு முன்னராக நடாத்தப்பட்ட ஏதாகிலும் வருமானம் உருவாக்கும் நடவடிக்கைகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள்;

* தகுதியுடைய வியாபாரங்கள் அவர்களுடைய காணப்படுகின்ற வருமானம் உருவாக்குகின்ற அல்லது பொருளாதார நடவடிக்கைக்கான  தொழிற்பாட்டுமூலதனத் தேவைப்பாடுகளுக்கு வசதிப்படுத்துவதற்கு கடன்கள் வழங்கப்படுகிறது.

துணைக் கடன்பெறுநர்களால் பங்குபற்றும் நிதியியல் நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதம்

ஆண்டிற்கு 4 சதவீதம்

சலுகைக் காலம்

1.  நடவடிக்கையின் தன்மையைப் பொறுத்து அதிகபட்சமாக ஆறு (06) மாதங்கள்
 
2. வியாபாரங்கள்  சலுகைக் காலத்தில் மூலதனம் மற்றும் வட்டி இரண்டினையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

மீளச்செலுத்தும் காலம்

சலுகைக் காலம் உட்பட அதிகபட்சமாக இருபத்து நான்கு (24) மாதங்கள்.

பிணை

பொருளாதார நடவடிக்கைகள் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  எவ்வாறாயினும், கொடுகடன் வசதிப்படுத்தலுடன் தொடர்பான கொடுகடன் இடர்நேர்வினைக் குறைப்பதற்கு பங்குபற்றும் நிதிநிறுவனங்கள் ஏதாகிலும் பொருத்தமான பிணையினைக் கோர முடியும்.

எவ்வாறு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வது

பணிப்பாளர்பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்,இலங்கை மத்திய வங்கி,இல. 30 சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பே.: 011 2477447, 011 2398721, 011 2477434, 011 2477348, 011 2477113, 011 2477015

தொ.ந.:   011 2477734

மின்னஞ்சல்: director_rdd@cbsl.lk