கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கிகளுக்கு வசதியாக இலங்கை மத்திய வங்கி அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது

கொவிட் - 19ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குமுகமாக பல அதிவிசேட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவுசெய்துள்ளது. வழமைபோன்று பெரும்பான்மையான கடன்பெறுநர்களால் கடன்களை திருப்பிச்செலுத்த முடியாமையால் செயற்படாக் கடன்களின் அதிகரிப்பில் உட்பட்ட உட்செல்லும் போக்கு, பொருளாதார செயற்பாட்டில் ஏற்படும் அசாதாரண இடையூறுகள் மற்றும் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட மூலதனத் தாங்கியிருப்புக்கள், தற்போதைய மற்றும் எதிர்கால திரவத்தன்மை நிலைகள் ஆகியவற்றால் வங்கித் துறையில் ஒட்டுமொத்த தாக்குப்பிடிக்கும் தன்மையை கருத்திற்கொண்டு நாணயச் சபை இந்நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கின்றது.

அதற்கிணங்க, கொவிட் - 19இல் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அவசர அடிப்படையில் உதவுவதற்கு வங்கிகளுக்கு கூடுதல் இடத்தை வழங்க பின்வரும் அதிவிசேட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த நாணயச் சபை முடிவு செய்துள்ளது.

  1. பொருளாதாரத்திற்கு சுமூகமான கடன் வளர்ச்சியை வசதிசெய்யும் மற்றும் கொவிட் - 19ஆல் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர் கிட்டிய எதிர்காலத்தில் தங்கள் வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளவும் உள்நாட்டு முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் (டி-எஸ்ஐபிஎஸ்) மற்றும் உள்நாட்டு முறையியல் ரீதியில் முக்கியத்துவமல்லாத வங்கிகள் முறையே 100 மற்றும் 50 அடிப்படைப் புள்ளிகளால் மூலதன தாங்கியிருப்பு பேணுகையைக் குறைக்க அனுமதிக்கப்படுகிறது.
  2. ஒரு கடன்பெறுனருக்கு வழங்கப்பட்ட நிலுவையிலுள்ள அனைத்து செயற்படாக் கடன்கள் மொத்தக் கடன் வசதிகளில் 30 சதவீதத்தினை விட அதிகளவாக இருக்கும் போது கடன்பெறுநருக்கு வழங்கப்பட்ட அனைத்துக் கடன் வசதிகளையும் செயற்படாக் கடனாக வகைப்படுத்துவதற்கான தேவையை நீக்குகிறது.
  3. சில தேவைகளைப் பூர்த்திசெய்வதாக வங்கிகள் உறுதிப்படுத்துமிடத்து வெளிநாட்டு நாணயத்தில் கடனை திரும்பப் பெறுவது சாத்தியமாக இல்லாத போது வெளிநாட்டு கடன்களை ரூபாயக் கடன்களாக மாற்றவும் ரூபாவில் திரும்பப் பெறவும் அனுமதியளிக்கப்படுகிறது.
  4. எந்தவொரு சலுகைகளுக்கும் உரித்தல்லாத கடன்பெறுநர்களுக்கு, 2020 மாச்சில் நிலுவையாக இருக்கக்கூடிய கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கு அவற்றைச் செலுத்தவதற்கு 60 நாட்கள் நீடிப்புக் காலத்தை வழங்க வங்கிகளை அனுமதிப்பதுடன், அத்தகைய கடன் வசதிகள் 60 நாட்கள காலப்பகுதி முடிவடையும் வரை செலுத்தப்படவேண்டிய நிலுவையாக கருத்தப்படமாட்டாது.
  5. கொவிட் - 19 பரவலினால் வாடிக்கையாளர்களால் எதிர்நோக்கப்படும் சவால்களின் காரணமாக, 16.03.2020 தொடக்கம் 30.06.2020 வரையான காலப்பகுதி வரை கொடுப்பனவு நிபந்தகைகள் மற்றும் கடன் ஒப்பந்தங்கள் என்பனவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களானதுஇ கடன்கள் மற்றும் முற்பணங்களின் வகைப்படுத்ல் மற்றும் கடன் பதிவழிப்பு கணிப்பீடுகள் போன்ற நோக்கங்களிற்காக கடன் மறுசீரமைப்பதற்கு பதிலாக திருத்தங்களாக கருத்திற்கொள்ள வங்கிகளை அனுமதித்தல்.
  6. 2020 இறுதியில் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாட்டை இதுவரை நிறைவு செய்யாத வங்கிகளின், மூலதனத்தை மேம்படுத்தவதற்கான தேவைப்பாட்டை 2022 இறுதிக்கு ஒத்திவைத்தல்.
  7.   தேவையேற்படின் எழுப்பப்பட்ட கரிசனைகளின் தீவிரத்தன்மை/ முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மேற்பார்வைக் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கான கால எல்லையை மீளமைத்தல். 2020 மே 30 வரையான காலப்பகுதியில் மேற்பார்வைக் கரிசனைகள்/ கண்டறியப்பட்ட விடயங்களினை நிவர்த்தி செய்வதற்கான கால எல்லையை எதிர்கொள்ள வேண்டிய வங்கிகளுக்கு இத்தகைய மேற்பார்வைக் கரிசனைகளைத் தீர்ப்பதற்கு மேலும் 3 மாதகால அவகாசம் வழங்கப்படுகின்றது.
  8. வங்கி மேற்பார்வைத் திணைக்களத்திற்கு நியதிச் சட்டக் கூற்றுக்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை இரண்டு வாரங்களாலும் மற்றும் காலாண்டு நிதியியல் கூற்றுக்களை வெளிடுவதற்கான கால எல்லையை ஒரு மாதத்தாலும் மறு அறிவித்தல் வரை நீடித்தல்.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களினதும் மற்றும் பெருமளவில் பொருளாதாரத்தினதும் சிறந்த நலனை ஆதரிக்கும் முகமாக இந்த இலகுபடுத்தல்களை செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொள்வதுடன் இதற்கு பதில் நன்மையாக வங்கித்துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

Published Date: 

Monday, March 30, 2020