இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 ஏப்பிறல்

இலங்கையின் தயாரிப்புத் துறையில் கொவிட் - 19 இனால் தூண்டப்பட்ட வீழ்ச்சியானது தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அளவீட்டின் தொடக்க காலத்திலிருந்து நோக்குகையில் மிகக் குறைந்த மட்டத்தினை அடைந்து, முன்னைய மாதத்திலிருந்து 5.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியொன்றுடன் 24.2 சுட்டெண் பெறுமதியில் பதிவாகிய மேலும் சுருக்கத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு ஏப்பிறல் காலப்பகுதியில் தீவிரமடைந்தது. சுட்டெண்ணின் இவ்வீழ்ச்சியானது ஒருபோதும் இல்லாத வீதங்களில் வீழ்ச்சியடைந்த புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் தொழில்நிலை மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.

வைரஸ் பரவலினை மட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு மூலம் அநேகமாக அனைத்துத் தயாரிப்பு நிறுவனங்களும் 2020 ஏப்பிறல் மாத காலப்பகுதியின் போது ஒன்றில் மூடப்பட்டிருந்தன அல்லது அதன் வழமையான கொள்ளளவின் ஒரு பகுதி தொழிற்படுத்தப்பட்டது. அதற்கமைய புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்கள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மிகவும் கீழ் காணப்பட்டன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொவிட் - 19இன் துரிதமான பரவலின் காரணமாக அந்நாடுகளின் கொள்வனவாளர்களிடமிருந்து   தமது வழமையான உற்பத்திகளுக்கு தாம் கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என புடவை மற்றும் அணியும் ஆடைத் துறைகளிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். மேலும், தொழில்நிலையில் வீழ்ச்சிக்கு சில அமைய/ தற்காலிக ஊழியர்கள் நிறுத்தப்பட்டமை முக்கிய காரணமாக அமைந்தது. உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளின் வீழ்ச்சிக்கேற்ப கொள்வனவுகளின் இருப்பும் குறைவடைந்தது.

முழு வடிவம்

Published Date: 

Monday, May 18, 2020