பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பான நாணயம் என்பது ஆரோக்கியமான காசு முறைமையின் அடிப்படையாகக் காணப்படுகின்றது. ஆகையினால்> போலி நாணயத்திலிருந்து உண்மையான நாணயத் தாள்களை வேறுபடுத்தி காண்பதற்கு நாணயத் தாள்களை வடிவமைக்கும் போது பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்கையில் நாணயத் தாள்களிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள் நம்பிக்கையளிக்கின்றது.  மேலதிக தகவல்களுக்கு

நீர்வரி அடையாளம்

நாணயத் தாளின் மீது வெவ்வேறான பறவைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதே பறவையையே நீர்வரி அடையாளமாக ஒவ்வொரு நாணயத் தாளும் வெளிக்காட்டுகின்றன. மேலும்> எண்களில் அமைந்துள்ள பெறுமதியானது தெளிவான நீர்வரி அடையாளமாக நிலைக்குத்தாக தோன்றுகிறது.

         

பாதுகாப்பு நூல்

பாதுகாப்பு நூல்கள் ஒவ்வொரு நாணயத் தாள் வகைக்கும் வேறுபட்டு காணப்படுவதுடன் “CBSL” எழுத்துக்களையும் பெறுமதியையும் கொண்டுள்ளன. உதாரணம்:Rs.20, Rs.100. ரூ.5000, ரூ.1000 மற்றும் ரூ.500 வகை நாணயத் தாள்களில் சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றமடைகின்ற ஸ்டார்கொம்® நூலின் அகலம் முறையே 3மிமீ> 2.5மிமீ மற்றும் 2மிமீ ஆகும். ரூ.100> ரூ.50 மற்றும் ரூ.20 வகையில் இந்நூல் நாணயத் தாளில் உட்பொதிந்துள்ளது.

         

மூலைக்கல்

ஒவ்வொரு நாணயத் தாளினதும் ஒவ்வொரு மூலையிலும் குறுவரp பட்டிகளின் வடிவில் மூலைக்கல் நீர்வரி அடையாளம் தோன்றுகிறது.

         

வெளிச்சத்தினூடாகப் பார்த்தல்

நாணயத் தாளை வெளிச்சத்தில் வைத்திருக்கும்போது> முன்பக்கத்திலுள்ள நாணயத் தாளின் எண் பெறுமதி> நாணயத் தாளின் பின்பக்கத்தில் மறுதலையாக சரிநுட்பமாக அதே இடத்தில் தோன்றுகிறது.

         

         

         

மிகச் சிறிய எழுத்துருக்கள்

உன்னிப்பாக பார்க்கும் போது, “CBSL” மற்றும் எண் பெறுமதிகளைக் கொண்L எழுத்துருக்களைப் பார்க்க முடியும்.

         

பார்வையற்றவர்கள் இனங்காணக்கூடிய அம்சம்

பார்வையற்றவர்கள் நாணயத் தாள்களின் வகைகளை இனங்காண்பதற்கு உதவும் வகையில் நாணயத் தாளின் படிமுறையாக செல்கின்ற, அதிக தடிப்பாக அச்சிடப்பட்ட புள்ளிகளின் நிலைக்குத்து ஒழுங்கு (ரூ.20 நாணயத் தாளுக்கு ஒரு புள்ளி), நாணயத் தாளின் இடது புறப் பக்கத்தில் தோன்றுகிறது.

         

உயர்த்தப்பட்ட வர்ணம்

நாணயத் தாளின் குறுக்கே விரல் நுனியை தடவி உயர்த்தப்பட்ட அச்சிட்ட பகுதிகளை உணர முடியும். (உ-ம் மத்திய வங்கி தலைப்பு> தொட்டுணரக்கூடிய பட்டைகள் மத்திய காணப்படும் உருவங்கள் போன்றன)