வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவதன் முக்கியத்துவம்  |  தேசிய பணவனுப்பல் மொபைல் செயலி |  இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முன்மொழியப்பட்ட ஊக்குவிப்புக்கள் | புள்ளிவிபரங்கள்  |  முக்கிய இணைப்புக்கள்

தொழிலாளர் பணவனுப்பல்கள்

இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல்களின் முக்கியத்துவம்

தொழிலாளர் பணவனுப்பல்கள், விரிவடைந்துவரும் வர்த்தகப் பற்றாக்குறைக்கு எதிராக கணிசமானளவு காப்பீட்டினை வழங்கி, இதன்மூலம் நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை உயர்த்துகின்ற இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களுக்கான முக்கிய தூணாக இருந்துவருகின்றன. வெளிநாட்டுச் செலாவணியினை ஈட்டுகின்ற முக்கிய வருமானம் என்ற ரீதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள், கடந்த இரு தசாப்த காலங்களுக்கு மேலாக ஏறத்தாழ 80 சதவீத ஆண்டுச்  சராசரி வர்த்தகப் பற்றாக்குறையினை ஈடுசெய்துள்ளன அத்துடன் 2020ஆம் ஆண்டுப்பகுதியில் பணவனுப்பல் உட்பாய்ச்சல்கள் வர்த்தகப் பற்றாக்குறையினை விஞ்சியுள்ளன.

மேலும், பல்வேறு வணிகப் பொருட்களின் ஏற்றுமதி வகைகளைப் போலன்றி, இவ்வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களை ஈட்டுவதில் இறக்குமதி உள்ளடக்கம் எதுவும் காணப்படுவதில்லை. ஆகவே, நாட்டிற்கான பணவனுப்பல்களை வலுப்படுத்துவதன் மூலம் முக்கியமாக, சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையினை குறுக்கமடையச் செய்தல், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல், வங்கித்தொழில் முறைமைக்கான வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையை மேம்படுத்தல், வறுமையை ஒழித்தல், வருமான மற்றும் பிரதேச ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் மற்றும் சமூக பாதுகாப்புக் கொடுப்பனவுகளின் இறைச் சுமையினைக் குறைத்தல் போன்ற பல்வேறு பேரண்டப்பொருளாதார மற்றும் சமூக பொருளாதார நன்மைகளை அடைந்துகொள்ள முடிகின்றது.

இலங்கை மத்திய வங்கியானது நாட்டிற்கான தொழிலாளர் பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் 2021.11.03ஆம் திகதியன்று வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களத்தினை தாபித்துள்ளது. வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களமானது நாட்டிற்கான தொழிலாளர் பணவனுப்பல்களை உயர்த்துவதில் உபாய ரீதியான வகிபாகத்தை ஆற்றுவதற்கும் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் பணவனுப்பல்களில் தொடர்புபட்டுள்ள ஏனைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் நலனோன்புகையினை உயர்த்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

தொடர்புகளுக்கு
தொலைபேசி    : 0112477426
தொலைநகல்    : 0112477477
மின்னஞ்சல்       :
முகவரி               : 15ஆம் மாடி, 3ஆம் கோபுரம், இலங்கை மத்திய வங்கி 

 

வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் வசதிப்படுத்தல் திணைக்களத்தின் முக்கியப் பணிகளாவன;

  1. ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் முறையான வழிகளினூடாக பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை ஊக்குவித்தல்.
  2. நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கும் பொருட்டு தொடர்புடைய முகவராண்மைகளினூடாக புலம்பெயர் நாடுகளையும் தொழில் வகைகளையும் பன்முகப்படுத்துவதற்கான வசதியினை மேற்கொள்ளுதல்.
  3. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களின் விழிப்பூட்டலினையும் கிடைப்புத்தன்மையினையும் மேம்படுத்துவதன் மூலமாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள மக்களுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் மிகுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு வசதியளித்தல். 
  4. தொடர்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதன் மூலமாக அதிகளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வசதியினையளித்தல்.  

 

 

தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள்

2021ஆம் ஆண்டின் 04ஆம் இலக்கப் பணிப்புரை

வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள்

2021ஆம் ஆண்டின் 05ஆம் இலக்கப் பணிப்புரை
2021ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கப் பணிப்புரை 
2021ஆம் ஆண்டின் 27ஆம் இலக்கப் பணிப்புரை