அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நாணயம்

இலங்கையில் நாணயத் தாள்களையும் குற்றிகளை வெளியிடுவதற்கான அதிகாரத்தினைக் கொண்டிருப்பவர் யார்?

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 44ஆவது பிரிவின் கீழ் இலங்கையில் நாணயத் தாள்களையும் குற்றிகளையும் வெளியிடுகின்ற ஏக அதிகாரத்தினை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது.

தற்போது என்ன இன நாணயத் தாள்களும் குற்றிகளும் சுற்றோட்டத்தில் இருக்கின்றன?

தற்போது சுற்றோட்டத்திலிருக்கும் நாணயத் தாள்களாக ரூ.5,000/=, ரூ.2,000/=, ரூ.1,000/=, ரூ.500/-, ரூ.100/=, ரூ.50/=, ரூ.20/=, ரூ.10/=, ரூ.5/=, ரூ.2/=, ரூ.1/= (தற்பொழுது ரூ.10/=, ரூ.5/=, ரூ.2/=, ரூ.1/= நாணயத் தாள்களுக்குப் பதிலாக குற்றிகள் சுற்றோட்டத்திலுள்ளன) உள்ளன. சுற்றோட்டத்தில் ரூ.20/=, ரூ.10/=, ரூ.5/=, ரூ.2/=, ரூ.1/= , சதங்கள்/=50, /=25, /=10,  /=05, /=02, /=01 ஆகிய நாணயக் குற்றிகள் இருக்கின்றன.

நாணயத் தாள்களும் குற்றிகளும் எவ்வாறு சுற்றோட்டத்திற்கு விடப்படுகின்றன?

இலங்கை மத்திய வங்கியானது உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகளுக்கு அவற்றின் கோாிக்கையின் பெயாில் நாணயத்தை வழங்குகின்றது. இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி பொருளாதாரத்தின் கொடுக்கல்வாங்கல் நோக்கங்களுக்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலமாக நாணயத் தாள்களையும் குற்றிகளையும் வழங்குகின்றது. 

அச்சிடப்பட்டு/வார்க்கப்பட்டு சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட நாணயத்தாள்கள் அல்லது குற்றிகளின் விபரக்குறிப்புக்கள் யாவை?

அவை பின்வருமாறு:

நாணயத் தாள்கள்

விபரக்குறிப்பு ரூ.20 ரூ.50 ரூ.100 ரூ.500 ரூ.1000  ரூ.5000
விட்டம் (மிமி)
128 * 67 133*67 138*67 143*67  148*67  153*67
நாணயத் தாளை வழங்கி 1வது ஆண்டு 
2010 2010 2010 2010  2010  2010
முதன்மை நிறம்  கடும் மண்ணிறம்  நீலம்  செம்மஞ்சள் ஊதா பச்சை  தங்கம்
முன் பக்கம் தற்போது காண்பிக்கப்பட்டவாறு கொழும்பு துறைமுகக் காட்சியும் வரலாறும்  ஆர்ச் பாலம் மற்றும் மன்னம்பிட்டியவில் உள்ள புதிய மற்றும் பழைய பாலம் நுரைச்சோலை நிலக்கரி மன் நிலையம் மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சி உலக வா்த்தக மையம் - இரட்டைக் கோபுரங்கள், இலங்கை வங்கி தலைமை அலுவலகம் மற்றும் லங்காதிலக் விகாரை ரம்பொடை சுரங்கப்பாதை வெஹெரகல நீா்த்தேக்கமும் கென்யன் நீா்த்தேக்கமும்
பின் பக்கம் வெஸ்நெத்தும நடனக்காரா் மற்றும் கெட்ட பெர மேளக்காரா் வடிக பதுன நடனக்காரா் மற்றும் யக்பெர மேளக்காரா் பரத நாட்டிய நடனக்காரா் மற்றும் மிருதங்க மேளக்காரா் தெல்ம் நெட்டும நடனக்காரா் மற்றும் யக்பெர மேளக்காரா் மல்படதய நெத்தும நடனக்காரா் மற்றும் தவுல் பெர மேளக்காரா்

நகரக்‌ஷ மற்றும் குருலுரக்‌ஷ நடனக்காரா்கள்

 

குற்றிகள்

விபரக் குறிப்புக்கள் ரூ.1 ரூ.2 ரூ.5 ரூ.10 ரூ.20
விட்டம் (மிமி) 20.0 22.0 23.5 26.4 28
தடிப்பு (மிமி) 1.75 1.75 1.8 1.8 2
வடிவமும் விளிம்பும் வட்டம்
இடைக்கிடை கடையப்பட்ட
வட்டம்
பொலிந்த
வட்டம்
Milled with reg. indentations
வட்டம்
11 கோண வடிவம்
வட்டம்
ஏழு கோண வடிவம்
குற்றியின் ஆண்டு  2017 2017 2017 2017 2020
உலோகம்/ கலப்பு துருப்பிடிக்காத உருக்கு துருப்பிடிக்காத உருக்கு துருப்பிடிக்காத உருக்கு துருப்பிடிக்காத உருக்கு நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
முன் பக்கம் இலங்கையின் படைக்கலச் சின்னம் இலங்கையின் படைக்கலச் சின்னம் இலங்கையின் படைக்கலச் சின்னம் இலங்கையின் படைக்கலச் சின்னம் இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடம்
பின் பக்கம் இலக்கங்களின் பெறுமதி, நாடு மற்றும் ஆண்டு இலக்கங்களின் பெறுமதி, நாடு மற்றும் ஆண்டு இலக்கங்களின் பெறுமதி, நாடு மற்றும் ஆண்டு இலக்கங்களின் பெறுமதி, நாடு மற்றும் ஆண்டு இலக்கங்களின் பெறுமதி, நாடு மற்றும் ஆண்டு

** மேலே ரூ.20 குற்றியானது இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வௌியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாகார்த்தக் குற்றியாகும். மேலும் இன்னும் இரு ரூ.20 சுற்றோட்ட நியம ஞாகார்த்தக் குற்றிகள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இலங்கையில் தொகைமதிப்பு மற்றும் வீடமைப்பின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் வெளியிடப்பட்டுள்ளன. 

நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் விசேட கடதாசி எது?

நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் விசேட கடதாசி 100 சதவீதம் பருத்திக் கூழிருந்து தயாரிக்கப்படுகின்றது. இது கடினமான உறுதியான இளையமைப்புமிக்கதாகும். எனினும், ரூ. 200 ஞாபகார்த்தத் தாள் (நாணயத்தாள் உருவாக்கப்பட்ட ஆண்டு: 1998)பொலிமரினால் ஆக்கப்பட்டது.

இலங்கைக்கான நாணயத்தாளினை யார் அச்சிடுகின்றார்கள், நாணயக் குத்திகளை யார் வார்க்கின்றார்கள்?

நாணயத் தாள்கள் இலங்கையிலேயே பியகமவிலுள்ள த டி லா றூ லங்கா கரன்சி அன்ட் செகுறிட்டி பிறின்ட் (பிறைவேட்) லிமிடெட்டினால் அச்சிடப்படுகின்றது

சுற்றோட்டத்திற்கு வழங்கிய பிந்திய குற்றித் தொடா்கள் சுலோவாக்கியாவில் உள்ள மின்குவானா கேர்மின்கா நிறுவனத்தினால் வார்க்கப்பட்டு 2020இல் ரூ.20 குற்றியானது சீனாவின் வங்கித்தாள் அச்சிடல் மற்றும் வாா்ப்படம் செய்தல் கூட்டுத்தாபனத்தினால் வாா்க்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கான சுற்றோட்ட குற்றிகளை வார்த்து வழங்கல் செய்வதற்கான வழங்குனர் (வழங்குனர்கள்) பன்னாட்டு விலைக்கோரல் செயன்முறையொன்றினூடாக தெரிவுசெய்யப்படுகின்றனர். 

போலி நாணயத்தாள் என்றால் என்ன?

இலங்கை மத்திய வங்கி தவிர்ந்த எவரேனும் ஆளினால் அல்லது நிறுவனத்தினால் சுற்றோட்டத்தினுள் வழங்கப்படுகின்ற நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகள் போலி நாணயமாக கருதப்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு https://www.cbsl.gov.lk/en/notes-coins/damaged-notes-and-counterfeits/counterfeit-prevention என்ற வெப்தளத்தினைப் பார்க்க. 

போலி நாணயத் தாளினையும் உண்மையான நாணயத்தாளினையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்?

போலி நாணயத் தாள்களை ஒழிக்கும் விதத்தில் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அனைத்து நாணயத் தாள்களும் உயர்ந்த பாதுகாப்புப் பண்புகளுடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. நாணயத் தாளில் அவதானிக்கக்கூடிய முக்கிய பாதுகாப்புப் பண்புகளாகப் பின்வருவன காணப்படுகின்றன:

தொட்டுணரக்கூடிய பண்புகள் கட்புலனாகக்கூடிய அம்சங்கள் -  வெற்றுக்கண்ணால் பார்க்கக்கூடிய அம்சங்கள் கட்புலனாகக்கூடிய அம்சங்கள் - குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம்
கடதாசி/ மூலப்பொருள் நிறங்கள் நுண்ணிய எழுத்து அமைப்பு
இன்டாக்லியோ அச்சிடுதல் நீர்வரி அடையாளம் Micro Fibers
தொட்டுணரக்கூடிய பட்டைகள் மூலைக்கல் - நீர்வரி அடையாளம் Fluorescent Feature
  பாதுகாப்பு நூலிழை  
  வெளிச்சத்தினூடாகப் பார்த்தல்  
  Multi-Layer Latent Image  

வெற்றுக்கண்ணால் பார்க்கக்கூடிய அம்சங்களையும் குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நுண்ணிய அம்சங்களையும் வேறு விசேட அம்சங்களையும் அவதானியுங்கள். எப்போதும் பல பாதுகாப்பு அம்சங்களை பரிசோதியுங்கள். ஒரு அம்சத்தின் மீது மாத்திரம் நம்பியிருக்க வேண்டாம். உங்களுக்கு சந்தேகம் எழுமாயின் நிச்சயமாக உண்மையானதாக நீங்கள் அறிந்த தாளுடன் சந்தேகத்திற்கு இடமான தாளினை ஒப்பிடுங்கள்.

போலி நாணயத் தாளொன்று எனக்கு கிடைப்பின் நான் என்ன செய்ய வேண்டும்?

போலி நாணயத் தாள்களைக் கொடுப்பனவு நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. போலி நாணயத் தாள்களை கொடுக்கல்வாங்கல்களுக்காக வேண்டுமென்றே பயன்படுத்துவது சிறைத் தண்டனைக்குரிய அத்துடன்/அல்லது தண்டம் செலுத்தப்படுவதற்குரியதொரு கடுமையான குற்றமாகும். போலி நாணயத் தாள்களை வைத்திருப்பதும் கூட குற்றமாகும். ஆளொருவர் போலி நாணயத் தாள்களை கண்டுபிடிக்குமிடத்து அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட வேண்டும். அத்தகைய தாளினை ஆளொருவர் ஏற்கனவே பெற்றிருப்பின் அவர், அத்தாளினை எவ்வாறு பெற்றிருக்கக்கூடும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டியதுடன் இதனை இலங்கை பொலிஸின் குற்றப்புலனாய்வு பிரிவின் போலி நாணயத் தாள் பணியகத்திற்கு உடனடி அழைப்பு எண்: 0112422176 அல்லது 0112326670 அறிவித்தலும் வேண்டும் என்பதுடன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக செயற்படவும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும். 

பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற தாள் என்றால் என்ன?

சுற்றோட்டத்தின் போது கிழிந்த, மோசமாக அழுக்கடைந்த எழுதியதன் மூலம் இலக்கங்கள் மாற்றப்பட்ட அல்லது சிறிதளவு சேதமடைந்த அல்லது வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட உண்மையான தாளொன்று பொருத்தமற்ற தாளெனக் கருதப்படலாம்.
பொருத்தமற்ற தாள்கள் மூன்று வகைப்படும்: -
பயன்படுத்த முடியாத தாள்கள், சேதப்படுத்தப்பட்ட/ உருச்சிதைக்கப்பட்ட தாள்கள், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருக்குழைக்கப்பட்ட தாள்கள்

"பயன்படுத்த முடியாத தாள்கள்"
நாணயத் தாளொன்று சுற்றோட்டத்தின் போது தூய்மையற்று, தேய்வடைந்து/ மோசமாக அழுக்கடைந்து போன ஆனால் உருவம் சிதைக்கப்படாத தாள்கள்.

"சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட தாள்கள்"
தேய்ந்து அல்லது கிழிந்தமையின் காரணமாக ஆரம்ப அளவிலிருந்தும் அளவு குறைவடைந்த, சேதமடைந்த, தோற்றம் மாற்றப்பட்ட எரிந்த, சிதைந்த, துண்டுகளாக்கப்பட்ட கிழிந்த அத்துடன் பாதுகாப்புப் பண்புகள், தாளின் மீதான திகதி, தொடர் இலக்கம், கையொப்பம் என்பன வேண்டுமென்றோ அல்லது விபத்தினாலோ அல்லது பல்வேறு இயற்கை அனர்த்தங்களினாலோ மாற்றமடைந்த தாள்கள் என்பன சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட தாள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

"வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருக்குழைக்கப்பட்ட தாள்கள்"
தாளின் மீதான திகதி, தொடர் இலக்கம், கையொப்பம், பெறுமதி அல்லது பாதுகாப்பு அம்சம் ஏதேனும் குறிப்பிடத்தக்க வழியில் மாற்றம் செய்யப்பட்டு வரைதல், சொற்கள், இலக்கங்கள், அடையாளங்கள் அல்லது குறியீடுகளால் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள்.

பயன்படுத்த முடியாத நாணயத் தாள்களை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடம் மாற்றிக் கொள்ள முடியுமா?

ஆம். பயன்படுத்த முடியாத நாணயத் தாள்களை உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகளினூடாக மாற்றிக்கொள்ளலாம்.

சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் ஊடாக மாற்றிக் கொள்ள முடியுமா?

ஆம். உாிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்ளகக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களை ஏற்றுக்கொள்வது தங்கியுள்ளது. உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகள் மீளளிப்பிற்காக சேதமடைந்த நாணயத்தாள்களை ஏற்றுக்கொள்வதுடன் அத்தாள்களின் மீளளிப்புப் பெறுமதியினைப் பரீட்சிப்பதற்காக/ தீர்மானிப்பதற்காக மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கும்.

உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகளினூடாக வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை நான் மாற்றமுடியுமா?

இல்லை. இந்நாணயத்தாள்கள் இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தின் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றும் கருமபீடத்தினூடாக மாத்திரம் மாற்றமுடியும். 

வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட/உருக்குலைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நாணயத் தாள்களை மீளளிப்பதற்கான விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்வதற்கு பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவும்: 
https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/notes_coins/Declaration_Willfully_Mutilated_Currency_E.pdf

நாணயக் குற்றிகளை ஏற்றுக்கொள்வதை உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகள் நிராகாிக்கமுடியுமா?

இல்லை. நாணயக் குற்றிகளின் எந்தவொரு தொகையினையும் ஏற்றுக்கொள் வேண்டும்.

சேதமாக்கப்பட்ட/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாளொன்று எனக்கு கிடைப்பின் நான் என்ன செய்ய வேண்டும்?

அத்தகைய நாணயத் தாள் (எரிந்த, சிதைவடைந்த, ஒரு பகுதி இல்லாத, துண்டுகளான அல்லது உருவம் மாற்றப்பட்டவை போன்றன) மத்திய வங்கியில் மீளளிக்கலாம். இவ்விடயத்தில் சேதமடைந்த நாணயத் தாள்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றவும்;

இல. சேதத்தின் தன்மை வேண்டப்படும் தயார்ப்படுத்தல்
1. கிழிந்த ஆனால் முழுமையாக பிரிவுறாத கிழிந்த துண்டுகளை இணைத்து நாணயத் தாளின் இருபுறமும் தெளிவாக தெரியக்கூடிய பசையுடைய நாடாவில் ஒட்டவும்.
2. பல பாகங்களாக கிழிந்த ஆனால் அனைத்துப் பாகங்களும் கிடைக்கப்பெறுகின்றது கிழிந்த துண்டுகளை இணைத்து நாணயத் தாளின் இருபுறமும் தெளிவாக தெரியக்கூடிய பசையுடைய நாடாவில் ஒட்டவும்.
ஒவ்வொரு பகுதியினையும் தாளின் கிட்டத்தட்ட மூல தோற்றத்திற்கான விதமொன்றில் இடம்பெறச் செய்யவும்.
3. மூலைகள் அல்லது சிறு பகுதிகளின் பாகங்கள் இல்லாத அல்லது சிறிய துளைகள் கடதாசியினை ஒட்டத்தேவையில்லை
4. கணிசமான பகுதியின் பாகமொன்று இல்லாமை தெரியக்கூடிய பசை நாடாவினை அல்லது ஒட்டும்  பசையினைப்  பயன்படுத்தி உருச்சிதைக்கப்பட்ட தாளின்  பின்பகுதியில் இல்லாத பகுதியின் கிட்டத்தட்ட அண்ணளவான அளவுடைய வெறுமையான வெள்ளை கடதாசியை ஒட்டவும்.
ஒட்டப்பட்ட உருச்சிதைக்கப்பட்ட தாள் நாணயத்தாளின் குறித்த வகையின் நியமமான பரிமாணத்தை ஒத்ததாக இருப்பதனை உறுதிசெய்க.

குறித்த நாணயத் தாளுக்கான தொடர்பான நடைமுறையினைப் பின்பற்றி அதனை மதிப்பீடு செய்து சாத்தியமாக மீளளிப்பதற்கு பின்வரும் முகவரிக்கு இலங்கை மத்திய வங்கிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பவும்.
     நாணயக் கண்காணிப்பாளர்
     நாணயத் திணைக்களம்,
     இலங்கை மத்திய வங்கி,
     சனாதிபதி மாவத்தை,
     கொழும்பு 1.

மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து பாா்க்கவும்:
https://www.cbsl.gov.lk/en/notes-coins/damaged-notes-and-counterfeits/exchanging-damaged-notes

மேலும், பயன்படுத்தமுடியாத அல்லது சேதமடைந்த/உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகம் சேதமடைந்த நாணயத் தாள் பரிவர்த்தனை கருமப்பீட பிரிவில் புதன் கிழமை அன்று மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 12.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் (பொது மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்து)
     கருமபீடப் பிரிவு,
     மாடி 4, கோபுரம் 5,
     தலைமை அலுவலகக் கட்டடம்,
     இலங்கை மத்திய வங்கி,
     சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1.

சேதமாக்கப்பட்ட/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் அவற்றின் முழு முகப்புப் பெறுமதியினையும் பெற தகுதியுடையனவா?

தொடர் முன்னெழுத்துடன் தொடர் இலக்கத்தில் 3/4 இற்கும் கூடுதலான பகுதியினைப் பயன்படுத்த பொருத்தமற்ற தாள் உள்ளடக்கியிருக்குமாயின், அத்தாள் முழுப் பெறுமதிக்கும் தகுதியுடையதாகும். முழுமையான தொடர் இலக்கத்துடன் 1/2 பங்கிற்கு கூடுதலாகவும் 3/4 பங்கிற்கு குறைவாகவும் தாள் ஒன்று காணப்படுமாயின், அது அதன் அரைப்பங்கு பெறுமதிக்கே தகுதியுடையதாகும். எனினும், வங்கித் தாளின் பெறுமதி, மத்திய வங்கியின் கொடுப்பனவிற்கு அங்கீகாரமளிக்கின்ற, அலுவலரின் தற்றுணிவின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. 

பாவனைக்கு பொருத்தமற்ற அல்லது சேதமடைந்த, உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை மத்திய வங்கி என்ன செய்கிறது?

இலங்கை மத்திய வங்கி பாவனைக்கு பொருத்தமற்ற அல்லது சேதமடைந்த, உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை சுற்றோட்டத்திலிருந்து மீளப்பெற்று துகள்களாக்கும் பொறியின் மூலம் அழித்து விடுகின்றது.

நாணயத் தாள்களை வேண்டுமென்றே உருச்சிதைத்தல், மாற்றம் செய்தல் அல்லது தோற்றத்தினை திரிவுபடுத்தல் தொடர்பாக ஏதாவது ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றனவா?

ஆம். 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 55ஆம் பிரிவின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கியினது ஆளுகைச் சபையின் அதிகாரமின்றி எந்தவொரு நபரும், பின்வருவனவற்றை மேற்கொண்டால்,

  1. வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எந்தவொரு நாணயத்தினையும் உருச் சிதைத்தல்;
  2. எந்தவொரு நாணயத் தாளிலும் அச்சிடுதல், முத்திரை பதித்தல் அல்லது எதனையும் வரைதல் அல்லது எந்தவொரு நாணயத் தாள்களின் மீதும் ஏதாவது சீல் அல்லது முத்திரைகளை ஒட்டுதல்;
  3. ஏதேனும் நாணயத் தாளின் மீது விளம்பரமொன்றின் தன்மையையொத்த அல்லது வடிவத்தினை இணைத்தல் அல்லது ஒட்டுதல்;

அவர் தண்டனைக்குரிய குற்றமொன்றினை இழைத்தவராகக் கருதப்படவேண்டும்.

ஆபரணங்களை அல்லது வேறு ஏதாவது பொருட்களைச் செய்வதற்கு நான் நாணயக் குற்றிகளைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை. இலங்கையில் சட்ட ரீதியான அந்தஸ்தினைக் கொண்ட எந்தவொரு நாணயக் குற்றியினையும் உருக்குதல், உடைத்தல், துளையிடுதல், உருச் சிதைத்தல் அல்லது சட்ட ரீதியான நோக்கங்களுக்குப் புறம்பாக பயன்படுத்துதல் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் நியதிகளின்படி குற்றமாகும்.

நாணயத் தாளொன்றினை நான் மீளத் தயாரிக்க முடியுமா?

இல்லை, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 55(ஈ)ஆம் பிரிவின்படி ஆளுகைச் சபையின் அங்கீகாரமின்றி போட்டோ பிரதியெடுத்தல், ஸ்கான் பண்ணுதல், வரைதல் போன்ற எந்த வடிவத்திலேனும் நாணயத் தாளொன்றினை மீள தயாரித்தல் குற்றமாகும்.

நாணயத் தாளை வடிவமைப்பதனை யார் தீர்மானிக்கின்றார்கள் அதற்கு என்ன காரணிகள் பரிசீலனையில் கொள்ளப்படுகின்றன?

நாணயத் தாள்களை வடிவமைத்து உற்பத்தி செய்து வழங்குதல் என்பன மத்திய வங்கியின் பொறுப்பாகும். வடிவமைத்தலை தீர்மானிப்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்துடனும் ஆலோசிக்கலாம் அத்துடன் பொதுமக்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆளுகைச் சபை நிதிக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சாின் ஒப்புதலுடன் மத்திய வங்கியினால் வழங்கப்படும் நாணயத் தாள்களின் இன வகைகள், பாிமானங்கள், வடிவமைப்புக்கள், பொறிக்கப்படுதல் மற்றும் ஏனைய பண்புகளை விதந்துரைத்தல் வேண்டும்.

பழைய நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகள் அல்லது வேறுஏதேனும் ஞாபகாா்த்த நாணயங்களை நான் எங்கு வாங்கலாம்?

கிடைக்கக்கூடிய தன்மையின்படி சில நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகள் அல்லது வேறுஏதேனும் ஞாபகாா்த்த நாணயங்களை இலங்கை மத்திய வங்கியின் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் கொழும்பு 01, இல.54, செத்தம் வீதி, சென்றல் பொயின்ட் கட்டடத்தில் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச் சாலையிலிருந்தும் கொள்வனவு செய்யலாம். 

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார அரும்பொருட்காட்சிச் சாலையிலிருந்து அல்லது ஏதேனும் பிரதேச அலுவலகங்களிலிருந்து நான் இணையவழி கொள்வனவுகளைச் செய்யமுடியுமா?

தற்பொழுது இணையவழி கொடுப்பனவு வசதிகள் இல்லை. எனவே நீங்கள் பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச் சாலையில் ஏதனேும் பிரதேச அலுவலகங்களில் நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளவேண்டும்.  

இலங்கை நாணயங்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாற்று ரீதியான தகவல்களை நான் எங்கே பெற்றுக் கொள்ளலாம்?

நாணயத்தின் வரலாற்று ரீதியான தகவல்களைப் பின்வரும் அரும்பொருட்காட்சி சாலைகளிலிருந்தும் வெளியீடுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

i) இலங்கை மத்திய வங்கி பின்வரும் இடங்களில் மூன்று அரும்பொருட்காட்சிச் சாலைகளை நிறுவியிருக்கிறது. அங்கு பொதுமக்களுக்காக வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கத்தக்கதாகவுள்ளன.

பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச் சாலை,
சென்றல் பொயின்ட் கட்டடம்,
54, செத்தம் வீதி,
கொழும்பு 01.
தொடா்பு இல. : +94 11 2444503
மின்னஞ்சல் : currency@cbsl.lk
நாணய அரும்பொருட்காட்சிச் சாலை,                                                    
பிரதேச அலுவலகம்,
இலங்கை மத்திய வங்கி,
கட்டம் 1,
அநுராதபுரம்.
நாணய அரும்பொருட்காட்சிச் சாலை,
பிரதேச அலுவலகம்,
அ.பொ.இல. 35, அநாகரீக தா்மபால மாவத்தை,
மாத்தறை

மேற்கூறப்பட்டவற்றிற்குப் புறம்பாக, எவரும் தகவல்களை பின்வரும் இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்:

http://www.museum.gov.lk/web/index.php?option=com_regionalm&task=regionalmuseum&id=6&lang=en

தேசிய அரும்பொருட்காட்சிச் சாலை,
தேசிய அரும்பொருட்காட்சிச் சாலைத் திணைக்களம்
சேர் மார்காஸ் பர்னாந்து மாவத்தை
கொழும்பு 7

ii) மத்திய வங்கியின் பின்வரும் வெளியீடுகளும் உதவும்.

  1. "அண்மைக் காலத்தில் இலங்கையின் நாணயம்" - ஆசிரியர் திரு. ரி. எம். யு. சாலி.
  2. "இலங்கையில் நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத் தாள்களின் வரலாறு" - ஆசிரியர் திரு. எச்.எஸ்.த. சில்வா
  3. "போலி நாணயத்தினைக் கண்டறிதல்" - சிங்கள மொழியில் ஆசிரியர் திரு. யசபால பெரேரா (இவ்வெளியீடுகள் இலங்கை மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களத்தில் விற்பனைக்கு கிடைக்கத்தக்கதாகவுள்ளன).
  4. "இலங்கையிலுள்ள நாணயக் குற்றிகள், நாணயத் தாள்கள் மற்றும் ஞாபகார்த்தக் குற்றிகளின் வரலாறு" சிங்கள மொழியில் (இவ்வெளியீடு மத்திய வங்கியின் நாணய அரும்பொருட்காட்சி சாலையில் கிடைக்கத்தக்கதாகவுள்ளது)
  5. மற்றைய கையேடுகள் மற்றும் சிற்றேடுகளும் இலங்கை மத்திய வங்கியின் நாணய அரும்பொருட்காட்சி சாலைகளில் கிடைக்கும்.
  6. ஆங்கிலத்தில் நாணய வௌியீடு மற்றும் முகாமைத்துவத்தின் 70ஆவது ஆண்டுப் பயணம் - செல்வி. செலோமி எச். குணவா்த்தன மற்றும் திரு. டபிள்யு. எம். கே. வீரகூன்.
  7. "புராண ருபியலம” – இலங்கை மத்திய வங்கியின் வௌியீடு

 

நாணய அரும்பொருட்காட்சி சாலை திறந்திருக்கும் நேரம்?

நாணய அரும்பொருட்காட்சி சாலை அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்ந்த வாரநாட்களில் பொதுமக்களுக்காக மு.ப. 9.00 தொடக்கம் பி.ப. 4.15 வரைத் திறந்திருக்கும்.