வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 மாச்சு

கொவிட்-19 தொற்று மற்றும் 2020 மாச்சு பின்னரைப்பகுதியில் இலங்கை பகுதியளவில் முடக்கப்பட்டிருந்தமை என்பன 2020 மாச்சில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்தினைப் பாதித்தன. உள்நாட்டு உற்பத்திச் செய்முறைகளின் இடையூறுகளுடன் சேர்ந்து நிரம்பல் மற்றும் கேள்விச் சங்கிலிகளில் காணப்பட்ட தடங்கல்கள் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலும் அதேபோன்று வணிகப்பொருட்களின் இறக்குமதிகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தோற்றுவித்தன. எனினும், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பெரிதாக இருந்தமையின் காரணமாக, 2019இன் இதே காலப்பகுதியினை விட வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. உலகளாவிய ரீதியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்திநிலையம் மூடப்பட்டமை என்பனவற்றின் காரணமாக சுற்றுலாத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து புலம்பெயர் வேலையாட்கள் நாடு திரும்பியமை அதேபோன்று வெளிநாட்டிலிருந்த சில வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தப்பட்டமை என்பனவற்றின் காரணமாக 2020 மாச்சில் வேலையாட்களின் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவடைந்தன. எனினும், கூட்டுக் கடன் வசதிகளிலிருந்தான பெறுகைகள் கிடைக்கப் பெற்றமையினால் நிதியியல் கணக்கு வலுவடைந்து காணப்பட்டது. 2020 மாச்சு இரண்டாம் வாரம் வரை ஒப்பீட்டு ரீதியில் உறுதியாகக் காணப்பட்ட இலங்கை ரூபா 2020 ஏப்பிறல் நடுப்பகுதி வரை குறிப்பிடத்தக்களவிற்குத் தேய்வடைந்ததெனினும், 2020 மே மாத காலப்பகுதியில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வுடன் அதன் பின்னர் குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, June 1, 2020