த பினான்ஸ் கம்பனி பிஎல்சியிற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது 2008இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து கம்பெனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது.

வேறுபட்ட உபாயதிட்டங்களுடாக கம்பெனியினை மீளமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. மேலும் கம்பெனியின் தற்போதைய நிலையின் தொடர்ச்சி அதன் வைப்பாளர்களையும் ஏனைய ஆர்வலர்களையும் பாதிக்கும். மேலும்  கடந்த 15 மாதங்களாக வைப்பாளர்கள் வைப்புச் செய்த பணத்தை மீளப்பெற முடியாதநிலை காணப்பட்டது.

வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ஒத்தோபர் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிட்டவாறு நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை 2019 ஒத்தோபர் 23ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கம்பனிக்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்தது.

நிதித்தொழில் சட்டத்தில் குறிப்பிட்டவாறு உரிமத்தினை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து 30 நாட்களுக்குள் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி எவ்வித ஆட்சேபனையும் வெளிப்பத்தவில்லை. அதன் அடிப்படையில் உரிமத்தினை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து 60 நாட்கள் முடிவடையும் நிலையில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினது உரிமம் இரத்துச் செய்யப்படலாம். அதாவது 2019 திசேம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இரத்துச் செய்யப்படலாம். இருப்பினும் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாணயச்சபை புதிய நம்பகமான முதலீட்டாளர் ஒருவரை மூலதன உள்ளீட்டிற்கான ஆதாரத்துடன் சேர்த்து வியாபார மீளமைத்தல் திட்டத்தினையும் சமர்ப்பிப்பதற்கு மீண்டுமொரு வாய்ப்பளித்தது. இருப்பினும் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி இதுவரையில் எவ்விததிட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலினை கொண்டு நடாத்துவதற்கு த பினான்ஸ் கம்பனி பிஎல்சியிற்கு வழங்கியிருந்த உரிமத்தினை நிதித் தொழில் சட்டத்தின் கீழ் 2020 மே 22ஆம் திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு தீர்மானித்தது. இதன்படி த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது நிதித்தொழில் செய்வதற்கான அனுமதி அதே திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது.

மேலும் இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத்திணைக்களத்தின் பணிப்பாளர், நிதி குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் நிதி குத்தகைக்குவிடல் நிறுவனமொன்றாக பதிவுசெய்யப்பட்ட த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் பதிவுச்சான்றிதழ் 2020 மே 22ஆம் திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது புதிதாக குத்தகைகள் வழங்கும் அனுமதி அதே திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது.

இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டமானது த பினான்ஸ் கம்பனி பிஎல்சியில் காப்புறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஒழுங்குவிதிகளின்படி உயர்ந்தபட்சம் ரூ.600,000 வரையான தொகையினை இழப்பீடாகச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன்படி மொத்தவைப்பாளர்களில் 93% வைப்பாளர்கள் வைப்பிலிட்ட முழுத்தொகையை (145,172 மொத்தவைப்பாளர்களுள் 135,100 வைப்பாளர்கள்) பெறக்கூடியதாக இருக்கும். எஞ்சிய 7% ஆன வைப்பாளர்கள் (10,072 வைப்பாளர்கள்) ரூ.600,000 வரை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், வைப்பாளர்கள் எஞ்சியுள்ள தமது வைப்புக்களின் ஒரு பகுதியை நிதிக்கம்பனி முடிவுறுத்தப்படும் போது கோரல்களின் முன்னுரிமை தொடர்பான ஒழுங்குவிதிகளுக்குட்பட்டு ஒடுக்கிவிடும் செயன்முறையினூடாகவும் அறவிட்டுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு:.

நிறுவனம் நோக்கம் தொலைபேசிஇலக்கங்கள் மின்னஞ்சல்
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களம் உரிமத்தினைஇரத்துச் செய்தல் 011 2477573
011 2477229
011 2477504
snbfi_query@cbsl.lk

தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்

திணைக்களம்

வைப்புக்காப்புறுதியின்கீழ்இழப்பீடுகளைபெற்றுக்கொள்ளுதல் 011 2398788  dred@cbsl.lk
பினான்ஸ் கம்பனி பிஎல்சி வைப்புகள் 011 2557888
011 2580210
 info@thefinance.lk
  கம்பனியிடம்இருந்துஅடகுச்சேவைகளைபெற்றவர்கள் 071 1359248  
  கம்பனியிடம்இருந்துஏனையசேவைகளைபெற்றவர்கள் 071 4086248
071 1864361
 

Published Date: 

Friday, May 22, 2020