கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி வழிமு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் பொருட்டு பல்வேறு எண்ணிக்கையிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானமெடுத்திருக்கின்றது. இந்த ஆரம்ப முயற்சிகளுக்கு ஒத்திசைவாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் முகம் கொடுக்கின்ற உடனடியான அச்சுறுத்தல்களை மிகவும் கருத்திற்கொண்டு மூலதன விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் பின்தள்ளிப்போடப்படும் வேளையில் தற்காலிக படிமுறையாக குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.
 
அதன்படி, அவசர அடிப்படையில், கொரோனா வைரஸ் (கொவிட் - 19) இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு உதவும் வகையில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கான மேலதிக இடவசதியினை வழங்குவதற்கு நாணயச் சபையானது பின்வருகின்ற அதிவிசேடமான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.
 
  1. வைப்பாளர்களினால் தீடீரென மேற்கொள்ளப்பட்ட பணமீளப்பெறுகைகள் மற்றும் கொடுகடன் கட்டணத்தின் மீளச் செலுத்துகையின்மை என்பவற்றின் காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளினால் முகம்கொடுக்கின்ற திரவத்தன்மை அழுத்தத்தினைக் குறைப்பதற்கு தவணை வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள் மற்றும் கடன்கள் என்பனவற்றின் மீதான திரவத்தன்மை சொத்து தேவைப்பாட்டின் பராமரிப்பினைக் குறைத்தல்.
  2. குறைந்தளவு மைய மூலதனத் தேவைப்பாடுகளுக்கு இணங்கிச்செல்வதற்கு ஒரு வருடகால நீடிப்பு. அதன்படி, ரூ.2 பில்லியன் மற்றும் ரூ.2.5 பில்லியன் வரையிலான மூலதன விரிவாக்கத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 2020.01.01 மற்றும் 2021.01.01 என்ற நேரவரையறை முறையே 2020.12.30 மற்றும் 2021.12.31 வரை நீடிக்கப்படுகின்றது.
  3. 2020.07.01 மற்றும் 2021.07.01 அன்று உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் குறைந்தளவு மூலதனப் போதுமானளவு தேவைப்பாடுகளின் விரிவாக்கத்தினை முறையே ஒரு வருட காலத்திற்கு 2021.07.01 மற்றும் 2022.07.01 இற்கு மேலும் பின்தள்ளிப்போடுதல்.
 
மேலும், நியதிச்சட்டத் திரட்டுக்களினை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவினை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், அதன்படி, அத்தகைய உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் சாதாரண வியாபாரச் செயற்பாடுகள் ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுயினுள் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு நியதிச்சட்ட திரட்டுக்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு அறியத்தரப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியானது, தேவைப்படுமிடத்து உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவளிப்புத் திட்டத்தின் கீழ் திரவத்தன்மை ஆதரவளிப்பினை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உறுதிசெய்வதற்கான செயன்முறைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது.
 
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குது;தகைக்குவிடும் கம்பனிகள், இக்காலப்பகுதியில் தங்களுடைய இடர்பாட்டுக் கோவை மற்றும் வளங்களினை விடாமுயற்சியுடன் கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுவதுடன் இலங்கை மத்திய வங்கியானது பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் துறையினை உறுதிசெய்வதற்கு ஏதாகிலுமான முன்னெச்சரிக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் திரவத்தன்மை மற்றும் மூலதனத் தேவைப்பாடுகளை தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கின்றது.
 

Published Date: 

Tuesday, March 31, 2020