தடயவியல் கணக்காய்வுகள்

மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வுகள் தொடர்பில் பல தவறான அறிக்கையிடல்கள் இடம்பெற்றுள்ளதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள விரும்புகின்றது:-

அ)நாணயச் சபையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியினதும் சட்டமா அதிபரினதும் ஆலோசனையுடன் 2015 பெப்புருவரி 01 தொடக்கம் 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக(அ) நாணயச் சபையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியினதும் சட்டமா அதிபரினதும் ஆலோசனையுடன் 2015 பெப்புருவரி 01 தொடக்கம் 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக புலனாய்வு செய்வதற்கும் பரீட்சித்துப் பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அத்துடன் கணக்காய்வு அறிக்கைகளிலும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற சில ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் முகவர் தொழிற்பாடுகளின் பிரயோகத்தினைப் பின்பற்றுகின்ற உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டவற்றிலும் அண்மைய ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த விடயங்களையும் தொடர்ந்து 6 தடயவியல் கணக்காய்வுகளைத் தொடங்குவதற்கு வழிமுறைகளை எடுத்தது.

(ஆ) 5 தடயவியல் கணக்காய்வுகளின் பெறுகை, அமைச்சரவை நியமித்த ஆலோசகர் பெறுiகைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அமைச்சரவையின் அனுமதியுடன் தடயவியல் கணக்காய்வில் உலகளவிய நடைமுறையினையும் சர்வதேச ரீதியான அனுபவத்தினையும் கொண்ட கணக்காய்வு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

(இ) முன்னெடுக்கப்பட்ட 6 தடயவியல் கணக்காய்வுகளில் இதுவரை ரூபா 275 மில்லியன் (ஏறத்தாழ) செலவில் 5 தடயவியல் கணக்காய்வுகள் நிறைவுபெற்றுள்ளன. இது ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தொகைகளுக்கு முரணானதாகும். 

(ஈ)6 ஆவது தடயவியல் கணக்காய்வுக்கான பெறுகைச் செயன்முறை தற்போது இடம்பெற்றுவருகின்றது. 

 

Published Date: 

Tuesday, January 21, 2020