வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 ஓகத்து

இறக்குமதிகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த வேளையில், முன்னைய மாதத்தில் ஏற்றுமதிகளில் காணப்பட்ட வீழ்ச்சி பெருமளவிற்கு மீட்சியடைந்தமையின் காரணமாக 2019 ஓகத்தில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019 ஓகத்தில் இறக்குமதிச் செலவினம் 16.6 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்ததுடன் முக்கிய ஏற்றுமதி வகைகளின் விலைகள் குறைவடைந்தமையின் பிரதான காரணமாக ஏற்றுமதி வருவாய்கள் 0.4 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) பகுதியளவில் வீழ்ச்சியடைந்தன.

2019 ஓகத்தில் வர்த்தகப் பற்றக்குறை 2019 யூலையில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 717 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 540 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. 

2019 ஓகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் உறுதியாக மீட்சியடைந்து முன்னைய மாதத்தினைக் காட்டிலும் 24.1 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் இடைவெளியும் குறுக்கமடைந்தது. 

2019 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 518 மில்லியனுக்கு 3.0 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தன. ஒன்றுசேர்ந்த அடிப்படையில், 2019இன் முதல் எட்டு மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 4,414 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியைவிட 7.6 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. 

2019 ஓகத்தில் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள் உட்பாய்ந்த வேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றுக்கான வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றைப் பதிவுசெய்தன. 

2019 ஓகத்து இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 8.5 பில்லியன்களாக விளங்கியதுடன் இது 5.1 மாத இறக்குமதிகளுக்குச் சமமானதாகும்.

முழுவடிவம்

 

Published Date: 

Monday, October 14, 2019