நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 ஏப்பிறல்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் (2006/2007=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 பெப்புருவரியின் 2.7 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 2.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உணவுப்  பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். ஆண்டுச் சராசரியொன்றின் அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் முன்னைய மாதத்தின் 0.9 சதவதீத்திலிருந்து 2016 மாச்சில் 1.1 சதவீதம் வரையில் உயர்வுற்றது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக்கொணட் ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் முன்னைய மாதத்தின் 1.7 சதவீத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 2.2 சதவீதமாகவும் ஆண்டுச் சராசரி அடிப்படையில் 2.4 சதவீதமாகவும் காணப்பட்டது. அதேவேளை, பொருளாதாரதத்pன் அடிப்படைக் கேள்வி அழுத்தத்தினை பிரதிபலிக்கின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக்கொண்ட மையப்பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், முன்னைய மாதத்தின் 5.7 சதவீதத்திலிருந்து 2016 மாச்சில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  

நாணயத் துறையில், 2016 பெப்புருவரியில் விரிந்த பணம் (M2b) முன்னைய மாதத்தின் 19.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 19.8 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியில் பதிவு செய்தமைக்கு உள்நாட்டுக் கொடுகடன் கூட்டுக்களில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் தூண்டுதலே காரணமாகும். உள்நாட்டுக் கொடுகடனின் பாரிய வகையாக விளங்கும் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 சனவரியின் 25.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 பெப்புருவரியில் 26.5 சதவீதத்தினால் அதிகரித்தவேளையில், உண்மை நியதிகளில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2016 பெப்புருவரி மாதத்தில் ரூ. 53.7 பில்லியனால் அதிகரித்தது. அதேவேளை, சந்தை வட்டி வீதங்கள் உயர்வடைந்து பொருளாதாரத்தில் காணப்பட்ட இறுக்கமான நாணய நிலைமையைப் பிரதிபலித்தன. முன்னோக்கிப் பார்க்கையில் அண்மைய நாணயக் கொள்கை வழிமுறைகள் ஓரளவு காலம் கடந்தபின்னரே பொருளாதாரத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதனால், எதிர்காலத்தில் பணம் மற்றும் கொடுகடன் விரிவாக்கத்தின்மீது மெதுவான தன்மையொன்று படிப்படியாக ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வெளிநாட்டுத் துறையில், 2016 பெப்புருவரியில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க கூடுதலாக இருந்தமையின் விளைவாக வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறுக்கமடைந்தது. 2016 மாச்சில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 22.8 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்ட வேளையில் 2016 பெப்புருவரியில் தொழிலாளர் பணவனுப்பல்கள்; 8.3 சதவீதம்கொணட் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தன. மொத்த அலுவல ; சார் ஒதுக்குகள் 2016 பெப்புருவரி இறுதியில் ஐ.அ.டொலர் 6.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சு இறுதியில் ஐ.அ.டொலர் 6.2 பில்லியனாக காணப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன் 2016இல் இதுவரை இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக பெருமளவு மாற்றஙக்ளெதனையும் கொண்டிருக்கவில்லை.  

நியதி ஒதுக்கு விகிதத்தினையும் கொள்கை வட்டி வீதங்களையும் உயர்த்துவதன் மூலம் நாணயக் கொள்கையினை இறுக்கமாக்குவதற்கு மத்திய வங்கி ஏற்கனவே மேற்கொண்ட வழிமுறைகளையும் அவ்வழிமுறைகளின் தாக்கம் நாணய நிலைமைகளின் மீது இன்னமும் முழுமையாக தாக்கத்தினை ஏற்படுத்தாமையினையும் பரிசீலனையில்கொணட் நாணயச் சபை, 2016 ஏப்பிறல் 26ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கையே பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் மாற்றமின்றி முறையே 6.50 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்தது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்: மாற்றமின்றிக் காணப்படுகிறது கொள்கை வீதங்கள்
துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 8.00%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%

Published Date: 

Tuesday, April 26, 2016