இலங்கை மத்திய வங்கி அரச பிணையங்கள் இரண்டாந்தரச் சந்தைத் தகவல்கள் மீதான வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் தொகுப்பினை முதல் தடவையாக வெளியிடுகின்றது

அரச பிணையங்கள் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கான மேலுமொரு கொள்கை வழிமுறையாக, மத்திய வங்கி இன்றிலிருந்து, இரண்டாந்தரச் சந்தையிலுள்ள அரச பிணையங்களின் உண்மையான வர்த்தகப்படுத்தல் தொடர்பில் வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் தொகுப்பினை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. 2016 ஓகத்து 1 இலிருந்து, அனைத்து முதனிலை வணிகர்களும் முக்கிய பன்னாட்டு நிதியியல் வர்த்தகப்படுத்தல் மற்றும் தகவல் இலத்திரனியல் தளமாக விளங்கும் புளும்போக்கினூடாக மத்திய வங்கியினால் ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தகப்படுத்தல் தளத்தில் முதனிலை வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத்தினை மேற்கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் அனைத்து முதனிலை வணிகர்களும் ரூ.50 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியினைக் கொண்ட அரச பிணையங்களின் அனைத்து உடனடி விற்பனைகளையும் ஒவ்nவாரு கொடுக்கல்வாங்கலும் முடிவடைந்த 30 நிமிடங்களுக்குள் இத்தளத்தின் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தல் வேண்டும். இதற்கமைய, மத்திய வங்கி இக் கொடுக்கல்வாங்கல்களை அது இடம்பெறும் ஒழுங்கின் அடிப்படையில் கண்காணிப்பதுடன், விளைவு வீதங்கள் மற்றும் அளவு என்பனவற்றை உள்ளடக்கிய வர்த்தகப்படுத்தலின் தொகுப்பு, வர்த்தகப்படுத்தப்பட்ட பிணையங்களின் ஒவ்வொரு தொடர்களாக கீழே இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் மத்திய வங்கியின் வெப்தளத்தில் வெளியிடப்படும். அறிக்கையிடும் முறைமை முழுமையாகத் தொழிற்படத்தொடங்கும் பொழுது, இனிவரும் காலத்தில், நண்பகலிலும் நாள் முடிவடைகையிலும் என நாளொன்றில் இரு தடவைகள் அத்தகைய தகவல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இத்தகவல், அரச பிணையங்கள் சந்தை நிலமைகளின் தற்போதைய நிலமையை முதலீட்டாளர்கள் ஆய்வு செய்வதற்கும் இதனுடன் ஏனைய நிதியியல் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பாக அவர்களின் முதலீடுகள் தொடர்பாக கூடியளவு தகவல்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை மேற்கொள்ளவும் உதவும். அத்தகைய சந்தைத் தகவல்களின் கிடைப்பனவு வெளிப்படையான தன்மையினையும் விலைகளைக் கண்டறிவதனையும் மேலும் மேம்படுத்துவதுடன் அரச பிணையங்கள் சந்தையினை மற்றைய நிதியியல் சந்தைகளுக்கு சமாந்தரமான விதத்தில் பாரிய செயல் விளைவுடையதாக்கும். வருங்காலத்தில் முதனிலை வணிகர் அல்லாத வங்கிகளினால் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு செய்யும் உடனடி இரண்டாந்தரச் சந்தையின் அரச பிணையஙக் ளின் உடனடி இரண்டாந்தரச் சந்தை விற்பனைகளும் இம்முறைமையின் கீழ் கொண்டுவரபப்டவுள்ளது.   

மேலும், மத்திய வங்கி மத்திய இனைத்தரப்பு முறைமையுடன் சேர்ந்து சிறப்பு இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் தளமொன்றினை ஏற்படுத்துவதற்காக கொள்வனவு செயன்முறையொன்றினை ஆரம்பித்துள்ளது. இது மற்றைய அபிவிருத்தியடைந்த நிதியியல் சந்தைகளைப் போன்று அதேநேர அடிப்படையில் சந்தை தகவல்களை வழங்குமென்பதுடன் அரச பிணையங்கள் சந்தையினை பன்னாட்டுத் தரத்திற்கு மேலும் அபிவிருத்தி செய்யும். அதேவேளை பன்னாட்டுத் தரங்களுக்கு இணையாக சந்தையின் ஒழுங்குவிதிகளையும் மேற்பார்வையினையும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோக்கத்திற்காக, அரச பிணையங்கள் சந்தையின் ஒழுங்குவிதிகளும் மேற்பார்வையும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளவிடத்து பொதுப்படுகடன் திணைக்களம் வழங்கல், பதிவு செய்தல், சந்தை அபிவிருத்தி மற்றும் படுகடன் முகாமைத்துவம் என்பனவற்றுடன் தொடர்பான தொழிற்பாடுகளை மேற்கொள்ளும். இது கொள்கை முன்னெடுப்புக்கள் நியாயமான சந்தை நடைமுறைகளை மேம்படுத்துமெனவும் அனைதது; பங்கேற்பாளர்களுக்கும் அரச பிணையங்கள் சந்தையின் விளைவு நன்மைகளை கிடைக்கச் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published Date: 

Thursday, August 4, 2016