இலங்கை நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல்

இலங்கை மத்திய வங்கி தூய நாணயத்தாள் கொள்ளை மற்றும் இலங்கை நாணயத்தாள்களை வேண்டுமென்று சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் மீதான ஒழுங்குவிதிகளை நடைமுறைக்கிடுவதற்காக பொதுமக்களின் அவதானத்தை ஈர்த்துள்ளது. நாணயத்தாள்களின் தரநிர்ணயத்தினைப் பேணுவதனையும் இதனூடக உண்மையான மற்றும் போலி நாணயத்தாள்களுக்கிடையிலான வேறுபடுத்தலுக்கு உதவுவதனையும் இலக்காகக் கொண்டு தூய நாணயத்தாள் கொள்கை இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கையினூடாக நாட்டின் நடத்தைப்பாங்கினை அதிகரிப்பதற்கும் நாணயத்தாள்கள் செயன்முறைப்படுத்தல் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் கீழ் இலங்கை நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் போன்றவை குற்றமாகக் கருதப்படுவதுடன் சிறை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கக்கூடியதொன்றாகும். நாணய விதிச் சட்டத்தின் 'உ" ஒழுங்குவிதியின் கீழ், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நாணயத்தாள்கள் தொடர்பில் கோரல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படலாகாது என்பதுடன், அத்தகைய நாணயத்தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் பிடித்து வைத்திருக்கப்படலாம். இந்நாணயத்தாள்களை வைத்திருப்பவர் அத்தகைய நாணயத்தாள்களின் முகப்பெறுமதியினை இழக்க வேண்டியிருக்கும். 

மேலும், வேண்டுமென்று சேதப்படுத்தல், மாற்றம் செய்யப்படும் அல்லது உருச்சிதைத்தல் நாணயத்தாள்களை மாற்றீடுசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயத்தாள் அச்சிடுதலினை அதிகரிக்க வேண்டியுள்ளது, இது, வேறுவகையில் மிகவும் ஆக்கபூர்வமான நோக்கங்களுக்கு செலவிடக்கூடிய பொது நிதியின் பாரியதொகையொன்றினை இதற்காக செலவிட வேண்டியுள்ளது. இதனால், வேண்டுமென்றே சேதப்படுத்தப்படும், மாற்றியமைக்கப்படும் அல்லது உருச்சிதைக்கப்படும் நாணயத்தாள்கள் தொடர்பில் கோரல்களை ஏற்றுக்கொள்வதில் இலங்கை மத்திய வங்கிக்கு எவ்விதக்கடப்பாடும் கிடையாது.

இதன்படி, இலங்கை நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தும், மாற்றம்செய்கின்ற அல்லது உருக்குலைக்கின்ற நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறும், அத்துடன் அத்தகைய நாணயத்தாள்கள் அவர்களிடம் உள்ளதாயின் 2017.12.31 அன்று அல்லது அதற்கு முன்னர் அருகிலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் அவற்றை கையளிக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி கோரிக்கை விடுக்கின்றது. எவ்வாறாயினும், வேண்டுமென்று சேதப்படுத்தப்படாத, மாற்றம் செய்யப்படாத அல்லது உருச்சிதைக்கப்படாத ஆனால் வழமையான சுற்றோட்டத்தின் போது தேய்தல் மற்றும் கிழிதல் காரணமாக சேதமாக்கப்படுகின்ற நாணயத்தாள்கள் நடைமுறையிலுள்ளது போன்று இலங்கை மத்திய வங்கியிலும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிலும் தொடர்ந்தும் பரிமாற்றம் செய்யக்கூடியது என்பதனை பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிக்கவிரும்புகின்றது. 

தூய நாணயத்தாள் கொள்கையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டின் சட்டரீதியான ஏற்பின் விழுமியத்தினையும் ஒருமைப்பாட்டினையும் காப்பதற்காக உதவுவதற்கு பொதுமக்களை இலங்கை மத்திய வங்கி அழைப்பு விடுக்கின்றது.

கண்காணிப்பாளர்
நாணயத் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி
இல.30 சனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை
தொலைபேசி : 011 - 2477587
மின்னஞ்சல் : உரசசநnஉல;உடிளட.டம
தொலைநகல் : 011 - 2477726

Published Date: 

Friday, December 15, 2017