பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான ப.நா.நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது 2016 செத்தெம்பர் 23

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

ஐாவூ லீ அவர்களினால் தலைமை தாங்கப்பட்ட ப.நா.நிதியத்திலிருந்தான அலுவலர் குழுவொன்று, மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளினால் உதவியளிக்கப்பட்டுவரும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இலங்கை அதிகாரிகளின் முதலாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக 2016 செத்தெம்பர் 13 - 26 ஆம் நாட்கள் வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. இந்நிகழ்ச்சித்திட்டமானது அரச நிதிகளை, வலுவானதும் உறுதியானதுதொரு நிலையொனெ;றினை இடுவதற்கும் அதன் சமூக மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான வசதிகளை உருவாக்குவதற்குமான நோக்கத்தினைக் கொண்டதாகும். விஜயத்தின் முடிவில் திரு. லீ பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றார். 

'முதலாவது மீளாய்வினை நிறைவு செய்வது தொடர்பில் குழுவானது அரசாங்கத்துடனான அலுவலர்மட்ட இணக்கப்பாடொன்றினை எய்வது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. ஒத்தோபரில் வாஷிங்டன் டி.சியில் இடம்பெறும் ப.நா.நிதியத்தினதும் உலக வங்கியினதும் ஆண்டுக் கூட்டங்களின் போது ஒத்தோபரில் இக்கலந்துரையாடல்கள் தொடரும். 

ஒட்டுமொத்தமாக, 2016இன் முதலரைப் பகுதியில் பேரண்டப் பொருளாதாரத்தின் செயலாற்றமானது சென்மதி நிலுவையின் கலப்பான முன்னேற்றம், அண்மைய வெள்ளங்களின் காரணமாக குறைவடைந்த வளர்ச்சி மற்றும் சிறியளவு உயர்ந்த பணவீக்கம் என்பனவற்றை பிரதிபலித்தது. தூதுக்குழுவானது, சந்தையின் நம்பகத்தன்மையினை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு நிலுவைகளின் மீதான அழுத்தங்களைத் தளர்த்தவும் பங்களித்த இறுக்கமான இறை மற்றும் நாணயக் கொள்கைகளின் காத்திரமான தன்மையினை வரவேற்கிறது. 

'தூதுக்குழுவானது, இடர்ப்பாடான சூழ்நிலைகளின் கீழும் அதிகாரிகள் ப.நா.நிதிய உதவியுடனான பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை யூன் இறுதியில் அவர்களின் கணியம்சார் இலக்கிடல்கள் அடையப்பட்டமைக்காக அவர்களைப் பாராட்டியது. எனினும், நிகழ்ச்சித்திட்ட மீளாய்வின் சில முன்னோக்கிய அம்சங்கள் முக்கியமாக, வரிச் சீர்திருத்தப் பொதியினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயங்கள் மேலும் தாமதமின்றி வலியுறுத்தப்படுவது அவசியமாகும்.

இதன்படி, 2016 மற்றும் 2017 இற்கான அரசிறை இலக்கிடல்களுக்கு ஆதரவளிப்பதற்குத் தேவையான பெறுமதிகூட்டப்பட்ட வரித் திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் சட்டச் செயன்முறைகளை அரசாங்கம் விரைவுபடுத்தியிருப்பது முக்கியமானதொரு விடயமாகும். 2017இற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு இலங்கையின் மொ.உ.உற்பத்திக்கான குறைந்த வரி அரசிறை விகிதத்தினை உயர்த்துவதற்கு சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட உயர்தர வரிக் கொள்கை உபாயம் பக்கபலமாக விளங்குதல் வேண்டும். புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான சட்டவாக்கச் செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது மிக ஊகிக்கத்தக்க வினைத்திறன் மிக்கதும் சமச்சீரானதுமான வரி முறைமைகளை மீள்சமநிலைப்படுத்தல்  மற்றும் நாட்டின் மிக விரும்பத்தக்க சமூக மற்றும் அபிவிருத்திக் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதற்குத் தேவையான மூலவளங்களை உருவாக்குதல் என்பனவற்றை நோக்கி எடுக்கப்பட்ட முக்கியமானதொரு நடவடிக்கையாகும். 

பணவீக்கத்தினை இலக்கிடப்பட்ட பிரிவொன்றிற்குள் பேணுவதற்காக வட்டி வீதங்களைச் சிறந்த முறையில் உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் நடவடிக்கையினை தூதுக்குழு வரவேற்றிருக்கிறது. இலங்கை மத்திய வங்கி பணவீக்க அழுத்தங்களைக் கண்காணிப்பதில் விழிப்பாக இருக்க வேண்டியதுடன் பணவீக்கம் அல்லது கொடுகடன் வளர்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமிடத்து அவற்றை மேலும் இறுக்கமாக்குவதற்கும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். வெளிநாட்டு அழுத்தங்கள் குறைவடைகின்றதொரு சூழ்நிலையில், தூதுக்குழுவானது பன்னாட்டு ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையினை மேலும் அபிவிருத்தி செய்யும் விதத்தில் செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மையினைப் பேணுவதற்கும் மத்திய வங்கி தொடர்ந்தும் முயற்சிப்பதற்கும் மத்திய வங்கியை ஊக்குவிக்கிறது. இது தொடர்பில் தூதுக்குழுவும் அதிகாரிகளும் ப.நா.நிதியத்தின் சாத்தியமான தொழில்நுட்ப உதவியுடன் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடலை நாணயக் கொள்கைக் கட்டமைப்பொன்றாக நிலை மாற்றுவதற்கான திட்டங்கள் பற்றி கலந்துரையாடின. 

அரச நிதியியல் முகாமைத்துவத்திலும் அரசுடமையாக்கப்பட்ட தொழில்முயற்சிகளிலும் அமைப்பியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல், கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட கணிசமான தொழில்நுட்ப உதவிகளைக் கட்டியெழுப்புதல் என்பன தொடர்பில் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை தூதுக்குழு ஊக்குவிக்கிறது. பிராந்திய மற்றும் உலகளாவிய நிரம்பல் சங்கிலிகளை பெருமளவிற்கு ஒருங்கிணைத்தல் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் உயர்ந்தமட்டம் மற்றும் தனியார் துறை முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை உயர்த்துதல் என்பனவற்றை நோக்கிய புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் நடுத்தர காலப் பேரண்டப் பொருளாதார குறிக்கோள்களை அடைவதற்கு முக்கியமானவையாகும். வர்த்தகம் மற்றும் தனியார் துறை அபிவிருத்திகளை உத்வேகப்படுத்துவதற்கான போட்டித்தன்மையானது வளர்ச்சி வாய்ப்புக்களுக்கு உதவியளிக்கும். 

தூதுக்குழுவானது மேதகு சனாதிபதி சிறிசேன, பிரதம மந்திரி விக்கிரமசிங்க நிதி அமைச்சர் கருணாநாயக்கா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அலுவலர்கள் மற்றும் வியாபார சமூகத்தினரின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பன்னாட்டு பங்காளர்கள் ஆகியோரையும் சந்தித்தது.

 

Published Date: 

Friday, September 23, 2016