இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2016 செத்தெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் செத்தெம்பரில் 57.7 ஆக அமைந்ததுடன் இது, 2016 ஓகத்தின் 53.5 இலிருந்து 4.2 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். செத்தெம்பரில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு புதிய கடட்ளைகள் மற்றும் உற்பத்தித் துணைத் துறைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றஙக் ள் தூண்டுதலாக அமைந்தன. தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்கள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்த வேளையில் கொள்வனவு இருப்புச் சுட்டெண் மாற்றமின்றிக் காணப்பட்டது. எனினும், தொழில்நிலை மற்றும் நிரமப்லர் வழங்கல் நேர துணைச் சுட்டெண்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து, நடுநிலையில் காணப்பட்ட நிரமப்லர் வழங்கல் நேர சுட்டெண்கள் தவிர்ந்த அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேம்பாடு உள்ளினைக் காட்டின. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 ஓகத்தில் 61.2 சுட்டெண் புள்ளியிலிருந்து செத்தெம்பரில் 57.7 சுட்டெண் புள்ளிகளைப் பதிவுசெய்தது. கடந்தமாதத்தின் பெறுமதியிலும் பார்க்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கை, தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள், துணைச் சுட்டெண்கள் என்பனவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சிகளே காரணமாக அமைந்தன. இருப்பினும் கூட, நடவடிக்கை  எதிர்பார்ப்புக்களுக்கான துணைச் சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தம்பரில் அதிகரித்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் தொகுப்புச் செயன்முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்படாத விலைகள் கட்டணம் 2016 செத்தெம்பரில் அதிகரித்ததெனினும் மெதுவான வேகத்திலேயே காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, October 14, 2016