முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி குளோபல் கெப்பிட்டல் மார்க்கட் பப்பிளிக்கேஷனால் இவ்வாண்டிற்கான சிறந்த தென்னாசியாவிற்கான ஆளுநராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்

இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாண்டிற்கான சிறந்த தென்னாசியாவிற்கான ஆளுநராக 2017 ஒத்தோபர் 14 அன்று வாசிங்கடன் டிசி இல் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க பிரசுரலாயமான குளோபல் கெப்பிட்டல் மார்க்கட்டின் விருது வழங்கும் வைபவத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறது. இவ்விருது வழங்கும் வைபவம் உலக வங்கி – ப.நா. நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்துடன் ஒரே நேரத்தில் எதேச்சையாக இடம்பெற்றிருக்கிறது. உலகளாவிய மூலதனம் என்பது பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் பணியாற்றுகின்ற மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் முன்னிலைச் செய்திகளையும் கருத்துக்களையும் தரவுப் பணிகளையும் வழங்குமொன்றாகும்.

( http;//www.globalcapital.com/about-global-capital )

விருது வழங்கல் தொடர்பாக 2017 ஒத்தோபர் 13ஆம் நாளன்று குளோபல் கெப்பிட்டல் வெப்தளத்தில் இடம்பெற்ற எல்லியட் வில்சன் அவர்களினால் வரையப்பட்டு குளோபல் கெப்பிட்டலில் காணப்படும் கட்டுரையானது மத்திய வங்கித் தொழிலுக்கான “சாந்தமான அமைதியான ஒன்றிணைந்த அணுகுமுறை” என்ற மகுடத்தின் கீழ் வெளியிடப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையானது, தென்னாசியாவின் மிக உயர்ந்த இயலாற்றலைக் கொண்ட மத்திய வங்கியின் முதன்மை அலுவலரான இந்திரஜித் குமாரசுவாமி அவரது எல்லையற்ற தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் கடந்த காலத்தின் சகதி நிறைந்த நீரினூடாக நாட்டினை வழிநடத்திச் செல்லும் தன்மை என்பனவற்றிற்காக இவ்விருதினைப் பெற முழுமையாக தகுதியுடையவராவர்” என ஆரம்பிக்கிறது.

இக்கட்டுரையைப் படிப்பதற்கான தொடர்பு இணைப்பு கீழே தரப்படுகிறது:

http://www.globalcapital.com/article/b1543cx35rxp17/central-bank-governo...

 

 

 

 

 

 

Published Date: 

Monday, October 16, 2017