கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டவாறு 2025 செத்தெம்பரில்; இலக்கினை நோக்கி உயர்வடைந்தது

2025 ஓகத்தில் நேர்க்கணியப் புலத்திற்கு திரும்பலடைந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்;டு), 2025 செத்தெம்பரில் பணவீக்க இலக்கினை நோக்கி அதன் மேல்நோக்கிய போக்கினைத் தொடர்ந்தது. அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2025 ஓகத்தின் 1.2 சதவீதத்திலிருந்து 2025 செத்தெம்பரில் 1.5 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.

FULL TEXT

Published Date: 

Tuesday, September 30, 2025