பேரண்டமுன்மதியுடைய கொள்கைக் கட்டமைப்பினை வெளியிடுதல்

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 63(2)ஆம் பிரிவின் பிரகாரம் பேரண்டமுன்மதியுடைய கொள்கைக் கட்டமைப்பினை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பேரண்டமுன்மதியுடைய கொள்கை வகுத்தல் செயன்முறை அதேபோன்று நிதியியல் முறைமையில் பேரண்டமுன்மதியுடைய கொள்கையின் வகிபாகம் என்பன பற்றி தொடர்புடைய ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இவ்வெளியீடு நோக்காகக் கொண்டுள்ளது.

பேரண்டமுன்மதியுடைய கொள்கைகளின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கம்; முறைமையியல் இடர்நேர்வுக் கண்காணிப்பு மற்றும் குறிகாட்டிகள்; பேரண்டமுன்மதியுடைய கருவிகள்; மத்திய வங்கியின் வேறு கொள்கைகளுடனான இடைத்தொடர்புகள்; நிறுவனசார் அமைப்பு அத்துடன் பேரண்டமுன்மதியுடைய நிலைப்பாடுஃ முறைமையியல் இடர்நேர்வு அபிவிருத்திகள் பற்றி மத்திய வங்கியின் தொடர்பூட்டல் என்பவற்றை இவ் ஆவணம் எடுத்துரைக்கின்றது. இலங்கையின் பேரண்டமுன்மதியுடைய அதிகார அமைப்பான மத்திய வங்கியின் பேரண்டமுன்மதியுடைய அணுகுமுறையில் ஆர்வமிக்கவர்களுக்கு இவ்வெளியீடு பயன்மிக்கதாகவும் நம்பகமான உசாத்துணை மூலமொன்றாகவும் அமைந்திருக்கும்.

பேரண்டமுன்மதியுடைய கொள்கைக் கட்டமைப்பின் தற்போதைய பதிப்பு இலத்திரனியல் வடிவில் கிடைக்கப்பெறுவதுடன் மத்திய வங்கியின் வலைத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publicatio...

Published Date: 

Thursday, March 14, 2024