இலங்கையுடனான புதிய விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான முதலாவது மீளாய்வினை பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நிறைவுசெய்கின்றது

இலங்கையுடனான 48 மாத காலம் கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் முதலாவது மீளாய்வினை பன்னாட்டு நாணய நிதியத்தின் சபை நிறைவுசெய்து, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சி.எ.உ. 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 337 மில்லியன்) தொகைக்கான அணுகல் வசதியினை நாட்டிற்கு வழங்குகின்றது.

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையின் செயலாற்றமானது திருப்திகரமாயமைந்தது. ஒன்றைத் தவிர்த்து அனைத்துச் செயலாற்றப் பிரமாணங்கள் மற்றும் ஒன்றைத் தவிர்த்து அனைத்துக் குறிகாட்டி இலக்குகள் யூன் இறுதியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2023 ஒத்தோபர்; இறுதியளவில் எட்டப்பட வேண்டிய கட்டமைப்புசார் அளவுகோல்கள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆளுகையினைக் கண்டறிகின்ற அறிக்கையினை அதிகாரிகள் வெளியிட்டு, ஆசியாவில் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆளுகையினைக் கண்டறிகின்ற செயற்பாட்டினை மேற்கொண்ட முதலாவது நாடாக இலங்கையினைத் தடம்பதிக்கச் செய்துள்ளனர். 

படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினை மீட்டெடுத்தல், அரசிறையினை அதிகரித்தல், ஒதுக்குத் தாங்கியிருப்புக்களை மீள்கட்டமைத்தல், பணவீக்கத்தினைக் குறைத்தல் மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல் என்பவற்றினை நோக்கி அதிகாரிகள் பாராட்டத்தக்க முன்னேற்றமொன்றினை மேற்கொண்டுள்ளனர். ஆளுகையினை மேம்படுத்துவதற்கும் வறிய மற்றும் பாதிப்படையக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான வலுவான அர்ப்பணிப்பு தொடர்ந்தும் இன்றியமையாததாயுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, December 13, 2023