நிதியியல் ஆற்றல்த்தன்மைக் குறிகாட்டிகள் பற்றிய வெளியீடு – வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்

மத்திய வங்கியினால் மேற்பார்வைசெய்யப்படுகின்ற வங்கிகளினதும் நிதிக் கம்பனிகளினதும் செயலாற்றத்தினை தொடர்பூட்டுவதற்கான முக்கிய கருவியொன்றான ‘நிதியியல் ஆற்றல்த்தன்மைக் குறிகாட்டிகளை’ மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இவ்வெளியீடானது நிதியியல் முறைமையில் காணப்படுகின்ற வலிமைகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பவற்றை அடையாளம் காணுவதற்கான கொள்கை பகுப்பாய்வுகளில் பயன்படுத்தப்படுகின்ற முக்கிய விகிதங்களையும் நிதியியல் பெறுபேறுகளையும் உள்ளடக்குகின்றது.

இவ்வெளியீடானது, சொத்துக்கள், பொறுப்புக்கள், உழைப்புகள், இலாபங்கள், மூலதனம் போன்ற துறைசார் நிதியியல் தகவல்களை எடுத்துக்காட்டுகின்ற அதேவேளை ஒவ்வொரு வகையுடனும் இணையப்பெற்ற முக்கிய விகிதங்களையும் வழங்குகின்றது. இலங்கையிலுள்ள முக்கிய நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றம் பற்றிய ஆர்வமுடையவர்களுக்கு பயனுள்ள மற்றும் நம்பகமான உசாத்துணை மூலமொன்றாக இவ்வெளியீடு அமைந்துள்ளது.

நிதியியல் ஆற்றல்த்தன்மைக் குறிகாட்டிகள் பற்றிய வெளியீடு இலத்திரனியல் வடிவில் மத்திய வங்கி வலைத்தளத்தில் கிடைக்கப்பெறுகின்றது.
https://www.cbsl.gov.lk/ta/நிதியியல்-ஆற்றல்த்தன்மை-குறிகாட்டிகள்

Published Date: 

Thursday, September 21, 2023