கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் பத்தொன்பது மாதங்களுக்கு பின்னர் 2023 யூனில் ஒற்றை இலக்க மட்டங்களுக்கு திரும்பியுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 யூனின் 12.0 சதவீதத்திலிருந்து 2023 யூலையில் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூனில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.

அண்மைய நான்கு ஆண்டுகளின் பின்னர், உணவு வகையானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூனில் அவதானிக்கப்பட்ட 4.1 சதவீதம் கொண்ட பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், 2023 யூலையில் 1.4 சதவீதம் கொண்ட பணச் சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. அதேவேளைஇ உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூனின் 16.2 சதவீதத்திலிருந்து 2023 யூலையில் 10.5 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம்இ 2023 யூலையில் -1.12 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்குஇ உணவல்லா வகைகளில் அவதானிக்கப்பட்ட   -1.13 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளின் ஒன்றிணைந்த விளைவும் உணவு வகையில் பதிவுசெய்யப்பட்ட 0.01 சதவீதம் கொண்ட சிறிதளவு விலை அதிகரிப்புக்களம் காரணமாக அமைந்தன. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 யூனில் 9.8 சதவீதத்திலிருந்து 2023 யூலையில் 6.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முன்னோக்கி நோக்குகையில், கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் பணவீக்கமானது நடுத்தர காலப்பகுதியில் மேலும் மிதமடைந்து ஏறத்தாழ இலக்கிடப்பட்ட மட்டத்திற்கு உறுதியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளின் காலங்கடந்த தாக்கம், வழங்கல் பக்கத்தில் முன்னேற்றங்கள், வலு மற்றும் உணவு பணவீக்கம் குறைவடைதல் மற்றும் சாதகமான தள விளைவு என்பன பணவீக்க வீழச்சி செயன்முறைக்கு துணையளித்துள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Monday, July 31, 2023