இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவுகள் – 2022” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படும் தரவுகளை உள்ளடக்குகின்ற கையேடான “இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவுகள் – 2022” பொதுமக்களின் தகவலுக்காக தற்போது கிடைக்கப்பெறுகின்றது. தற்போதைய தரவுகள் கையேடானது தொடரின் 45ஆவது தொகுதியாகும்.

எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய இக்கையேடானது 14 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் தோற்றப்பாடு, முக்கிய பொருளாதாரக் குறிக்காட்டிகள், நாட்டின் ஒப்பீடுகள், சமூக பொருளாதார நிலைமைகள், மனித வளங்கள், தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள் மற்றும் கூலிகள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, வெளிநாட்டு நிதி, அரச நிதி அத்துடன் பணம், வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களைக் உள்ளடக்கியுள்ளது. இக்கையேடானது நடைமுறையில் கருத்திற்கொள்ளக்கூடிய பரந்தளவிலான சமூகப் பொருளாதார தரவுகளை சுருக்கமாக எடுத்துரைப்பதனால், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள்,  தொழில்சார் நிபுணர்கள்,  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயன்மிக்க உசாத்துணை மூலமாக அமையும்.

வெளியீட்டின் தமிழ் பதிப்பினை இலத்திரனியல் வடிவில் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் (http://www.cbsl.gov.lk) பெற்றுக்கொள்ளலாம்.

Published Date: 

Monday, November 14, 2022