2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் கடுமை என்பனவற்றினை பரிசீலனையிற்; கொண்டு விதித்துரைக்கப்படலாம்.
அதற்கமைய, பணம் தூயதாக்குதலுகெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற வகையில் நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்புக்களை அமுல்படுத்துவதற்கு கீழே குறிப்பிடப்பட்டவாறு ரூ.1.0 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக விதித்துள்ளது. தண்டப்பணமாக சேகரிக்கப்பட்ட நிதி, திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருக்கிறது.
1. சம்பத் வங்கி பிஎல்சி
விதிப்புத் திகதி: 2022 யூன் 02
தொகை: ரூ. 1,000,000.00 (ரூபா ஒரு மில்லியன்)
கொடுப்பனவுத் திகதி: 2022 யூலை 01
தண்டப்பணம் விதித்தமைக்கான காரணம்:
சந்தேகத்திற்கிடமான கொடுக்கல்வாங்கல்கள் பற்றி நிதியியல் உளவறிதல் பிரிவில் சம்பத் வங்கியின் கோவைப்படுத்தம் செயன்முறைiயில் மீறுகையொன்று காணப்பட்டது என்றும், அத்துடன் மீறுகையானது வங்கியினால் தடுத்திருக்கப்பட்டிருக்கவேண்டிய வெளிப்படுத்ததல்களை மட்டுப்படுத்திமைக்கு வழிவகுத்துள்ளது என்றும் வெளிப்படுத்தப்பட்டமையினால், தகவல்களை வெளியிடாத கடமை தொடர்பில் நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 9(1)ஆம் பிரிவுடன் இணங்காமைக்காக நிருவாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.