பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்கள் இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டுடன் தொடர்புடைய அலுவலர் மட்ட உடன்படிக்கையினை எட்டியுள்ளனர்

ஏறத்தாழ ஐ.அ.டொலர் 2.9 பில்லியன் பெறுமதிகொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான 48 மாதகால உடன்படிக்கையொன்றுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் அலுவலர் மட்ட உடன்படிக்கையொன்றினை எட்டியுள்ளனர்.

பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையையும் மீட்டெடுக்கும் வேளையில் நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல், ஊழலினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்திசெய்தல், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்வதற்குக் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல் என்பன இலங்கைக்கான புதிய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் குறிக்கோள்களாக அமைந்துள்ளன.

படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை நிச்சயப்படுத்தல் மற்றும் நிதியியல் இடைவெளிகளை நிரப்புதல் என்பவற்றிற்குத் துணைபுரிவதற்கு இலங்கையின் கடன்வழங்குநர்களிடமிருந்து படுகடன் நிவாரணமும் பல்புடைப் பங்காளர்களிடமிருந்து மேலதிக நிதியிடலும் அவசியப்படும். இலங்கையின் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களிடமிருந்து படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை மீளமைப்பதற்கான நிதியியல் உத்தரவாதம் மற்றும் தனியார் கடன்வழங்குநர்களுடனான கூட்டு உடன்படிக்கையொன்றினை எட்டுவதற்கான நல்லெண்ண அடிப்படையிலான முயற்சியினை மேற்கொள்ளல் என்பன பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கு நிதியியல் ஆதரவினையளிப்பதற்கு முன்னரான அத்தியாவசியத் தேவைப்பாடுகளாகவுள்ளன.

முழு வடிவம்

Published Date: 

Thursday, September 1, 2022