நெருக்கடிகாலத் தொடா்பூட்டல்

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள் முறைமைகள்

இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

இலங்கை மத்திய வங்கியானது, தடங்கலற்ற அத்தியாவசிய கொடுப்பனவுச் சேவைகள், தன்னியக்கக் கூற்றுப் பொறித் தொழிற்பாடுகளை வசதிப்படுத்துகின்ற நாட்டின் தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத்தீர்த்தல் முறைமைகள், நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளூடான கொடுப்பனவுகள் (உ-ம்) இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை (SLIPS) மற்றும் பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆழி  (CEFTS) மற்றும் கியுஆர் குறியீடுகள்), காசோலைக் கொடுப்பனவுகள், இணையவழி வங்கித்தொழில் மற்றும் செல்லிடத் தொலைபேசி அடிப்படையிலான வங்கிச் சேவை போன்றவற்றை உறுதிசெய்வதற்கு பொறுப்பாகவுள்ளது.மேற்குறித்த கொடுப்பனவுகளின் இறுதித் தீர்ப்பனவுகளை அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையூடாக மேற்கொள்வதும் இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகும்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் லங்கா கிளியர் (பிறைவேற்) லிமிடெட் என்பன மூலம்  தொழிற்படுத்தப்படுகின்ற  கொடுப்பனவு முறைமைகளிலிருந்து தடங்கலற்ற சேவைகளுக்கு உத்தரவாதமளிப்பதற்கான அனைத்தையுமுள்ளடக்கிய தொழில் தொடா்ச்சித் திட்டங்கள் செயற்பாட்டிலுள்ளன. மேலும் நாட்டின் கொடுப்பனவுகள் மற்றும் தீா்ப்பனவுகள் முறைமைகளுக்கு இத்தரப்பினரால் தோற்றுவிக்கப்படுகின்ற முறைமைசாா் இடா்நோ்வினைக் குறைக்கும் பொருட்டு அதேநேர மொத்தத் தீா்ப்பனவு முறைமைப் பங்கேற்பாளா்களினதும் லங்கா கிளியர் (பிறைவேற்) லிமிடெட் நிறுவனத்தினதும் தொழில்தொடா்ச்சித் திட்ட ஒழுங்குகளை இலங்கை மத்திய வங்கி கண்காணித்து மதிப்பிடுகின்றது.

கொடுப்பனவு முறைமைகளில் தோன்றக்கூடிய சிக்கல்களை அவை தோன்றுகின்ற போதும் தோன்றுகின்றவாறும் கண்காணித்துத் தீா்ப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி அா்ப்பணித்துள்ளது. கொடுப்பனவு வழிகளுக்கு இலகுவான பொறுவழியினை உறுதிசெய்வதற்கும் கிரமமான, இடைத்தடங்கலற்ற கொடுப்பனவு முறைமைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்குமான முயற்சியொன்றாக இவ்வனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.