வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 மாச்சு

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 மாச்சில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறியளவிலான வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்திருந்தபோதிலும் தொடர்ச்சியாக பத்தாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டது. அதேவேளை, இறக்குமதிச் செலவினம் 2021 பெப்புருவரியிலிருந்து முதற்தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்கதொரு வீழ்ச்சியினைப் பதிவுசெய்தது. இதன் விளைவாக 2022 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வர்த்தகப் பற்றாக்குறையானது வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மாச்சில் குறிப்பிடத்தக்கதொரு மேம்பாட்டினைக் காண்பித்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 மாச்சு மாத காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஒரு நாளுக்குள்ளே செலாவணி வீதத்தில் ஏற்படுகின்ற பாரியளவிலான தளம்பலினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வங்கிகளுக்கிடையிலான சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதத்தின் நடுத்தர வீதம் மற்றும் வேறுபாட்டு எல்லையினை மத்திய வங்கி 2022 மே 13 தொடக்கம் வெளியிட ஆரம்பித்துள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Sunday, May 15, 2022